ETV Bharat / bharat

நிலச்சீரழிவால் உணவுப் பாதுகாப்புக்கு அபாயம் - இந்தியாவுக்கு புதிய அச்சுறுத்தல்!

author img

By

Published : Jan 5, 2020, 8:01 PM IST

நிலச்சீரழிவால் இந்தியா எதிர்கொள்ளப் போகும் அச்சுறுத்தல் பற்றி தெளிவாக விளக்குகிறது இத்தொகுப்பு...

நிலச்சீரழிவால் உணவுப் பாதுகாப்புக்கு அபாயம்
நிலச்சீரழிவால் உணவுப் பாதுகாப்புக்கு அபாயம்

இந்தியா எதிர்கொள்ளும் வளரும் நெருக்கடிகளில் ஒன்றாக நிலச்சீரழிவு உருவெடுத்துள்ளது. காடழிப்பு, அதிகப்படியான பயிர்செய்கை, மண் அரிப்பு மற்றும் ஈரநிலப் பரப்பு குறுகுதல் போன்ற காரணங்களால் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 30% (96 மில்லியன் ஹெக்டேர்) சீரழிந்துள்ளது. இந்த நில இழப்பு, பயிர் விளைச்சலில் பாதிப்பை ஏற்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு 2.5 % மொத்த உள்நாட்டு உற்பத்தியை விழுங்கிவிடுகிறது. இது மட்டுமின்றி, நாட்டில் பருவநிலை தப்புதலின் தன்மையைக் கூட்டி, இன்னும் பெரிய சீரழிவை ஏற்படுத்துகிறது.

பருவநிலை தப்புதலைச் சரிபார்ப்பதற்கான ஒரு முதன்மையான உரைகல்லாக காடுகள் இருக்கின்றன. ஆனால், 2000 முதல் இந்த 18 ஆண்டுகளில் இந்தியாவில் 16 இலட்சம் ஹெக்டேர் வனப்பகுதி காலியாகியுள்ளது. 2015ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடிக்கும் அதிகமான மரங்களை வெட்டுவதற்கு அரசாங்கம் அனுமதித்தது. நாட்டிலுள்ள பாதுகாக்கப்பட்ட நிலப்பகுதிகள் மற்றும் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களில் செயல்படுத்தப்பட்ட 500-க்கும் மேற்பட்ட திட்டங்கள், தேசிய வனவிலங்கு வாரியத்தால் மோடி தலைமையிலான அரசாங்கத்தின் முதல் நான்கு ஆண்டுகளில் (ஜூன் 2014 முதல் மே 2018 வரை) தடுத்துநிறுத்தப்பட்டுள்ளன. அதற்கு முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம், 2009 - 2013 காலகட்டத்தில் இதைப்போன்று 260 திட்டங்களைத் தடுத்துநிறுத்தியிருந்தது.

இதே நிலை தொடருமானால், இந்தியாவில் சிறு, நடுத்தர மட்டத்தில் இருக்கும் 80% விவசாயிகள் கூடியவிரைவில் மோசமான பாதிப்புக்கு உள்ளாவார்கள். ஐ.நா. விவரப்படி, அரிசி, கோதுமை, கரும்பு, நிலக்கடலை, காய்கறிகள், பழம் மற்றும் பருத்தி ஆகியவற்றின் இரண்டாவது பெரிய உற்பத்தி நாடாகவும், உலகின் மிகப் பெரிய பால், பருப்பு வகைகள் மற்றும் சணல் உற்பத்தி நாடாகவும் விளங்கும் இந்தியா, வேளாண் பொருளாதாரங்கள், உணவுப் பாதுகாப்பு அபாயத்தில் மாட்டிக்கொள்ளும். மண் அரிப்பும் அதனால் ஏற்படும் பருவநிலை தப்புதலும் கால்நடை விலங்குகளின் வளர்ச்சியையும் உற்பத்தித்திறனையும் நேரடியாக பாதிக்கும். இதைக் கூறுவது வேறு யாருமல்ல, பருவநிலை தப்புதலை ஆய்வுசெய்யும் ஐ.நா. சபையின் அரசுகளுக்கிடையேயான சர்வதேச அரசு குழு (ஐபிசிசி) அமைப்புதான்!

டெல்லியைத் தளமாகக் கொண்ட அரசுசாரா நிறுவனமான தி எனர்ஜி அண்ட் ரிசோர்ஸ் இன்ஸ்டிட்யூட் (டெரி)-இன் ஆய்வுத் தகவலின்படி, வனப்பகுதி அற்றுப்போதலால் ஏற்கெனவே இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.4% குறைந்துவிட்டது. ஒரு கட்டத்தில், பருவநிலை தப்புதலால் இந்தியா போன்ற பல நாடுகள், பசுமையில்ல வாயுக்களில் ஒன்றான கரியமில வாயுவை (CO2) உறிஞ்சும்திறனை இழக்கநேரிடும். இது, புவி வெப்பமயமாதலை இன்னும் மோசமாக்கும். ஏற்கனவே பூமியில் பத்து இலட்சத்துக்கும் அதிகமான உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன; பெருமளவிலான குடியிருப்பு அருகிவருதல், நிலப்பரப்பு சீரழிவு காரணமாக, உலகளாவிய உணவுப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

உள்ளூரின் சுற்றுச்சூழல் அமைப்பு குறித்து அறிந்திருக்கும் பழங்குடியினரும், பிற பூர்வகுடியினரும் காடுகளைப் பாதுகாப்பதில் முதன்மையான பங்கு வகிக்கிறார்கள் என்பதை இந்திய அரசாங்கம் உணர்ந்திருந்தது. முடிவெடுப்பதிலும் செயலாக்கத்திலும் அவர்களுக்குள்ள ஈடுபாடானது சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்க உதவுகிறது. அதாவது, பருவநிலை தப்புதலுக்கு பாதகமாக, மண் அரிப்புத் தடுப்பு, காடுகளின் பாதுகாப்பு ஆகிய முயற்சிகளை வலுப்படுத்துகிறது. 2006ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட வன உரிமைகள் சட்டமானது, பருவநிலைக்கான செயல்பாடுகளைச் சரிபார்க்க ஒரு சிறந்த கருவியாக இருக்கமுடியும். ஏனெனில் தலைமுறைகளாக வனத்தைப் பயன்படுத்திவரும் பழங்குடியினர் மற்றும் பிற பூர்வகுடியினருக்கு, வனநிலத்தையும் இயற்கை வளங்களை அணுகவும், அதைப் பயன்படுத்தவும் பாதுகாத்து மேலாண்மை செய்யவும் இந்த சட்டம் அங்கீகாரம் அளிக்கிறது. ஆனால் இச்சட்டத்தின்படி உரிமைகளை அங்கீகரிக்கும் நடைமுறையானது மிகவும் மெதுவாக உள்ளது. நாடு முழுவதும் 40 மில்லியன் ஹெக்டேர் வனப்பகுதியில், ஏப்ரல் 30, 2019 நிலவரப்படி, 12.93 மில்லியன் ஹெக்டேர் வனப்பரப்புக்கு மட்டுமே உரிமைகோரலை அரசாங்கத்தால் தீர்த்துவைக்க முடிந்துள்ளது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் நடந்துவரும் ஒரு வழக்கால் வன உரிமை அங்கீகாரம் மறுக்கப்பட்ட 20 லட்சம் குடும்பங்கள் மலைப்பகுதியிலிருந்து வெளியேற்றப்படலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இப்போதைக்கு, நிராகரிக்கப்பட்ட அனைத்து உரிமைகோரல்களை மறுஆய்வு செய்வதில் 21 மாநில அரசுகள் இறங்கியிருப்பது, ஒரு நல்ல சேதி.

இந்தியாவில், கடுமையான வானிலை மாற்றங்கள் மற்றும் மனிதச் செயல்பாடுகளால் நீர் மற்றும் காற்றினால் உண்டான உப்புத்தன்மை மற்றும் மண் அரிப்பால் நிலமானது சீரழிக்கப்பட்டுள்ளது. இதனால் 72 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை நாடு சந்தித்துள்ளது. அதாவது, 2018-19 ஆம் ஆண்டின் வேளாண்மைத் துறை வரவு செலவுக்கான ஒதுக்கீடைவிட இது அதிகம் என்று டெரி ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கள்தொகை அதிகரித்தபடி இருக்கும் இந்தியாவில் உணவளிக்கப் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்தச் சிக்கல் உரித்தானது ஆகும். உலகளாவிய வறுமைக் குறியீட்டு மதிப்பிடலில், 2018 ஆம் ஆண்டில் 119 நாடுகளில் இந்தியா 103 ஆவது இடத்துக்கு வந்திருந்தது. அதற்கு முந்தைய ஆண்டில், 100 வது இடத்திலிருந்தது; இப்போது மூன்று இடங்கள் குறைந்து கீழே வந்துள்ளது.

நிலச்சீரழிவால் உணவுப் பாதுகாப்புக்கு அபாயம்
நிலச்சீரழிவால் உணவுப் பாதுகாப்புக்கு அபாயம்

இந்தியாவின் சதுப்பு நிலப்பரப்பானது 1,52,600 சதுர கி.மீ. அளவுக்குப் பரவியுள்ளது; இது, நாட்டின் மொத்த நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 5 சதவீதம் அதாவது அசாம் மாநிலத்தைப் போல இரண்டு மடங்கு பரப்பளவு ஆகும். ஆனால் காடழிப்பு, பருவநிலை தப்புதல், மழைநீர் வடிகால், நில ஆக்கிரமிப்பு மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகியவை இந்த சதுப்பு நிலத்தின் பரப்பைக் குறைத்துக்கொண்டுவருகின்றன. ஆண்டுதோறும் நாடளவில் இதன் மொத்த பரப்பில் 2 முதல் 3 சதவீதம் இல்லாமல் ஆக்கப்படுகிறது. இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் 40 சதவீத அளவு சதுப்புநிலக் காடுகள் கடந்த முப்பதாண்டுகளாக பயிர்நிலங்களாகவும் குடியிருப்புப் பகுதிகளாகவும் மாற்றப்பட்டுள்ளன. புவி வெப்பமடைதலுக்கு எதிரான போராட்டத்தில், சதுப்பு நிலங்கள் முக்கியமானவை; ஏனென்றால், அதிக அளவு கார்பனை விரைவாக உறிஞ்சும் `உயர் கார்பன் சுற்றுச்சூழல் அமைப்பை’ இந்த நிலங்கள் பாதுகாக்கின்றன.

சதுப்பு நிலங்களையும் சீரழிக்கப்பட்ட மண்ணையும் மீட்பதற்கு இந்தியா எந்தவித உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அழியக்கூடிய நிலையிலுள்ள இந்திய சுற்றுச்சூழலின் ஒரே பாதுகாப்பு அரணாக இருக்கும் கடலோரப்பகுதி ஒழுங்குமுறை மண்டல 2018 அறிவிக்கையை நீர்த்துப்போகச்செய்வது, கட்டட-மனை வர்த்தக நிறுவனங்களின் பெரும் திட்டங்களுக்கு வழிசெய்வதாகும். கடலோரப்பகுதி ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள விதிமுறைகள் ஒழுங்காகச் செயல்படுத்தப்பட்டால், கடலோரப் பகுதிகளும் அழியக்கூடியநிலையிலுள்ள சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும்.

புவி வெப்பமயமாதலானது இந்தியாவுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது; ஏனெனில் இங்கு நிலப்பகுதியின் 69 சதவீதம், வறட்சியான, பகுதி வறட்சியான, வறண்டதும் பகுதி ஈரப்பதமுமான நிலப்பரப்பு ஆகியவற்றைக் கொண்டதாகும். இந்த உலர்ந்த நிலப்பரப்பானது, நீர் பிரச்னையாலும் கடும் வறட்சியாலும் பாதிக்கப்படக்கூடியது. அதுவும், 2050 ஆம் ஆண்டில் புவியின் வெப்பநிலை 1.5 டிகிரி உயரும்போது இது இன்னும் மோசமடையும் என்று மதிப்பிடப்படுகிறது. 60 கோடி பேர் அதாவது நாட்டின் மக்கள் தொகையில் பாதியளவினர், அதிகமான நீர்ப் பற்றாக்குறையை எதிர்கொண்டுவரும் நிலையில், ஐபிசிசியின் கணக்குப்படி, உலக அளவில் அதிகமான நீர்ப்பற்றாக்குறை நாடுகளில் இந்தியா 17ஆவது இடத்தில் உள்ளது; இந்தியா உள்பட்ட இந்தப்பட்டியல் நாடுகளில் ஆண்டுக்கு அரைவாசி மழைதான் கிடைக்கிறது.

டெல்லி அறைகூவல்: டெல்லியில் அண்மையில் நடந்துமுடிந்த பாலைவனமயமாக்கலுக்கு எதிரான ஐநா உடன்படிக்கை அங்கத்துவ நாடுகளின் (யுஎன்சிசிடி) 14ஆவது மாநாட்டில், சமாதான வன முன்முயற்சியைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று அறைகூவல் விடுக்கப்பட்டது. மோதலால் பாதிக்கப்பட்ட இரு நாட்டு எல்லைப் பகுதிகளில், சீரழிந்த நிலங்களை மீட்டெடுப்பதானது, பதற்றத்தைத் தணித்து, நாடுகளுக்கும் மக்களுக்கும் இடையில் நம்பிக்கையை வளர்ப்பதற்கும் உதவக்கூடியதாக இருக்கும். 2030 ஆம் ஆண்டளவில் நிலச் சீரழிப்பு இல்லாமல் ஆக்குவதை நீடித்த வளர்ச்சிக்கான இலக்காகவும் அந்தந்த தேசியச் செயல்பாட்டு இலக்காகவும் கொள்வதாக உறுப்பு நாடுகள் உறுதியெடுத்துள்ளன.

இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, நிலச்சீரழிப்பை இல்லாமலாக்கும் இலக்குத் திட்டத்துக்காக, யுஎன்சிசிடி உறுப்பு நாடுகளுக்கான உலகளாவிய துறைசார் துணைதரவுக்கான ஒரு நிறுவனத்தை அமைக்கும் திட்டத்தை முன்மொழிந்தார். மேலும், நிலச் சீரழிப்பு ஒழிப்பு நடுநிலை மூலோபாயத்தின் மையமான உலகளாவிய நீர் நடவடிக்கை நிகழ்ச்சி நிரலை உருவாக்கக்கான மூலவுத்திக்கு மையமான உலகளாவிய தண்ணீர் செயல்திட்டம் ஒன்றையும் உருவாக்குமாறு இந்தியா கேட்டுக்கொண்டது. 2030-வாக்கில் இந்தியாவில் மேற்கொண்டு நிலச் சீரழிப்பு ஏற்படாமல் தடுக்கவும் மொத்தம் 9.64 கோடி ஹெக்டேர் சீரழிக்கப்பட்ட நிலங்களில் குறைந்தது 30 மில்லியன் ஹெக்டேர் அளவுக்கான தரிசு நிலம், காடு, விவசாய நிலங்களைச் சீரமைக்கவும் உறுதிபூண்டுள்ளது.

Intro:Body:

DEGRADED LANDS THREATEN TO CHECK FOOD SECURITY IN INDIA


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.