ETV Bharat / bharat

பெங்களூருவுக்கு அடிமைகளாகக் கடத்திவரப்பட்டவர்கள் மீட்பு

author img

By

Published : Mar 10, 2020, 10:32 AM IST

பெங்களூரு: ஒடிசா, சத்தீஸ்கரிலிருந்து அடிமைகளாக கர்நாடகாவின் யெலஹங்கா என்னும் பகுதிக்கு கடத்திவரப்பட்ட 204 பேரை தொழிலாளர் துறை அலுவலர்கள் மீட்டுள்ளனர்.

helots brought from Odisha and Chhattisgarh rescued
helots brought from Odisha and Chhattisgarh rescued

ஒடிசா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலிருந்த கர்நாடக மாநிலத்தில் உள்ள யெலஹங்கா என்னும் பகுதிக்கு அடிமைகளாகக் கடத்திவரப்பட்ட 204 பேரை தொழிலாளர் துறை அலுவலர்கள் மீட்டனர். அடிமைகளாகக் கடத்திவரப்பட்டவர்களில் 40 பேர் குழந்தைகள் எனக் கூறப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர். இதையடுத்து மனித கடத்தல், குழந்தைத் தொழிலாளர் முறை உள்ளிட்ட சட்டங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டது.

கடத்திவரப்பட்டவர்கள் ஒடிசா மாநிலத்தின் பலங்கிர், நவ்படா, சுபர்னபூர் மாவட்டங்கள், சத்தீஸ்கர் மாநிலத்தின் கரியாபந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க... காஞ்சிபுரத்தில் கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட 21 பேர் மீட்பு!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.