ETV Bharat / bharat

பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்!

author img

By

Published : Sep 27, 2020, 9:01 AM IST

Updated : Sep 27, 2020, 11:53 AM IST

Former Union Minister Jaswant Singh passes away
Former Union Minister Jaswant Singh passes away

08:50 September 27

டெல்லி: அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சி செய்த காலக்கட்டத்தில் பல முக்கிய துறைகளில் அமைச்சராகவும், பாஜக கட்சியை நிறுவிய தலைவர்களுள் ஒருவருமான ஜஸ்வந்த் சிங் காலமானார். அவருக்கு வயது 82.

வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை, நிதித் துறை உள்ளிட்ட பல பதவிகளை இவர் வகித்தவர். தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக எம்பியாக இருந்தவர்.

வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில் 1996-ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டுவரை இவர் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். பாஜகவை வலுப்படுத்தியதில் இவருக்கு முக்கிய பங்குண்டு. பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற காலமான 2014இல், ஜஸ்வந்த் சிங் பாஜகவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.  

இவருக்கு அண்மை காலமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று மருத்துவமனையில் ஜஸ்வந்த் சிங் உயிர் பிரிந்தது. அவர் மறைவையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தங்களின் இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.

Last Updated :Sep 27, 2020, 11:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.