ETV Bharat / bharat

ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனை- அரவிந்த் கெஜ்ரிவால்

author img

By

Published : Aug 24, 2020, 5:11 PM IST

டெல்லி:  மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஏற்படும் கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டு ஆன்லைன் மருத்துவ செயலியை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கிவைத்தார்.

Delhi govt upcoming online hospital management system to do away with long queues
Delhi govt upcoming online hospital management system to do away with long queues

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (ஆக.24) காணொலி காட்சி மூலம் தாதா தேவ் மகப்பேறு மருத்துவமனையின் மொபைல் செயலி மற்றும் இணைய அடிப்படையிலான ஆன்லைன் பதிவு முறையை அறிமுகப்படுத்தினார்.

அப்போது பேசிய அவர்,"தாதா தேவ் மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. டெல்லி அரசின் மருத்துவமனை மேலாண்மை தகவல் அமைப்பில் ( haspital information management system ) பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவை ஒரு வருடத்திற்குள் நிறைவடையும். இந்த முறையை மற்ற மருத்துவமனைகளும் பின்பற்ற வேண்டும்.

"பெண்கள் நோயாளிகள் இனி நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை, இப்போது இந்த பயன்பாட்டின் மூலம் முன்பதிவு செய்து மருத்துவர்களின் நேரத்தைப் பெற முடியும்.

கரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் மருத்துவனைகளில் கூட்டம் இருக்கக்கூடாது. மேலும் அங்கு தகுந்த இடைவெளியை பராமரிக்க வேண்டும்.

இந்த அமைப்பு முறை செயலுக்கு வந்த பிறகு, அரசாங்க மருத்துவமனைகளில் நீண்ட வரிசைகள் மற்றும் கூட்டங்கள் அகற்றப்படும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.