ETV Bharat / bharat

'அதிக கடன் வாங்குங்கள்; மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்யுங்கள்: ப.சிதம்பரம் அறிவுரை

author img

By

Published : Sep 6, 2020, 4:32 PM IST

டெல்லி: சரிந்த பொருளாதாரத்தை மீட்க உலக வங்கியில் இருந்து அதிக கடன்களை வாங்குமாறு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

Borrow more to stimulate demand, revive economy: Chidambaram to govt  Borrow more to stimulate demand  Chidambaram suggestion to government  Chidambaram suggestion to revive economy  business news  ப சிதம்பரம்  அதிக கடன் வாங்குங்கள்  முன்னாள் நிதியமைச்சர்
'அதிக கடன் வாங்குங்கள்;மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்யுங்கள்: மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் அறிவுரை

நாட்டின் பொருளாதார வீழ்ச்சியாலும், ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மாநிலங்களுக்கு வழங்கப்படாமல் உள்ளதாலும் மத்திய அரசு கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

அரசியல் கட்சியினர், பொருளாதார நிபுணர்கள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துவரும் நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், பொருளாதாரத்தை மீட்பதற்கு இஎப்ஆர்பிஎம் விதிமுறைகளை தளர்த்துவது, முதலீடுகளை அதிகரிக்கச் செய்வது, உலக வங்கியில் கடன் பெறுவது உள்ளிட்ட அறிவுரைகளை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளார்.

  • 4. Use food grain stock to pay wages in kind and start massive public works

    5. Re-capitalize banks to enable them to lend

    6. Pay the arrears of GST compensation to the States

    All of the above will need money. Borrow. Don’t hesitate.

    — P. Chidambaram (@PChidambaram_IN) September 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், "பொருளாதாரத்தை மீட்பதற்கு, ஏழ்மை நிலையிலுள்ள 50 விழுக்காடு குடும்பங்களின் கைகளில் பணம் கிடைக்கச் செய்யவேண்டும். மேலும், அவர்களுக்கு உணவு, தானியங்களை வழங்கவேண்டும். உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களில் அதிக முதலீடு செய்யவேண்டும். பொதுப்பணிகளைத் தொடங்கவேண்டும். மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்கவேண்டும். இதற்காக தயக்கம் காட்டாமல் உலக வங்கியில் கடன் வாங்குங்கள் " என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஒன்பது காலாண்டுகளாக தொடரும் பொருளாதார வீழ்ச்சி - சிதம்பரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.