ETV Bharat / bharat

ஆத்திரத்தில் மாமியாரை கத்தியால் குத்தி கொன்ற மருமகன்!

author img

By

Published : Dec 11, 2019, 5:16 PM IST

ஹைதராபாத்: மனைவியை வீட்டுக்கு அனுப்பிவைக்குமாறு நடந்த தகராறில் மாமியாரை மருமகன் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனுக்கு
தனுக்கு

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் துர்கா பிரசாத். ஏழு மாதங்களுக்கு முன்பு ஆந்திரா மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் உள்ள தனுக்கு கிராமத்தைச் சேர்ந்த வரலட்சுமி என்பவரைத் இவர் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு பிரசாத் வரலட்சுமியுடன் ஹைதாபாத்தில் குடிபெயர்ந்தார்.

இந்நிலையில், கணவன்-மனைவி இடையே அவ்வப்போது குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இதேபோன்று, சமீபத்தில் நடந்த சண்டையில் கணவரிடம் கோபித்துக்கொண்டு வரலட்சுமி தாய் வீட்டிற்குச் சென்றார். இதனிடையே, வரலட்சுமியைத் தேடி தனுக்கு கிராமம் வந்த பிரசாத் மனைவியை வீட்டுக்குத் திரும்பி அனுப்பிவைக்குமாறு மாமியிடம் தகராறு செய்துள்ளார்.

தனுக்கு

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பிரசாத் தான் மறைத்துவைத்திருந்த கத்தியைக்கொண்டு மாமியாரைக் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், பிரசாத் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் ராஜினாமா!

Intro:Body:



With the family quarrels son-in-law murdered mother-in-law with knife in Paturu, Tanuku, West Godavari dist.

Durga Prasad from Hyderabad got married 7months ago with Varalakshmi D/o Pedda Nageswara rao, Lakshmi belongs to Tanuku old city. After marriage, they went to Hyderabad and there was a dispute between the husband and wife. A week ago Vara Lakshmi came to her parents home.  Prasad came to Tanuku for his wife... quarreled with his aunt that he should send his wife with him. In the dispute the aunt dried with a knife. She was dead on the spot by the stabbing.

 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.