ETV Bharat / bharat

கரோனாவிற்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு!

author img

By

Published : Mar 27, 2020, 2:34 PM IST

பெங்களூரு: கர்நாடகாவில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார்.

A 65 year-old man who had tested positive for Coronavirus passes away in Tumakuru -Karnataka
A 65 year-old man who had tested positive for Coronavirus passes away in Tumakuru -Karnataka

சீனாவில் உருவான கரோனா வைரஸ் தொற்று இந்தியாவையும் அச்சுறுத்திவருகிறது. இந்த நோயால் நாடு முழுவதும் 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. கர்நாடகாவில் மட்டும் 55 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று கர்நாடகாவில் இரண்டாவதாக, 65 வயதுடைய ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 5ஆம் தேதி டெல்லிக்கு ரயிலில் சென்று, 11ஆம் தேதி ரயிலிலேயே பெங்களூருக்கு திரும்பியுள்ளார்.

இதனையடுத்து ரயிலில் பயணித்த ரயில் பயணிகள் குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாக தும்மகுரு இணை காவல் ஆணையர் ராகேஷ் குமார் தெரிவித்தார்.

இதையும் படிங்க...தமிழ்நாட்டில் மேலும் ஆறு பேருக்கு கரோனா பாதிப்பு!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.