ETV Bharat / bharat

கர்நாடக முதலமைச்சராக பதவியேற்கும் பசவராஜ் பொம்மை - யார் இவர்?

author img

By

Published : Jul 27, 2021, 9:06 PM IST

கர்நாடக முதலமைச்சர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அம்மாநில உள் துறை அமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Basavaraj Bommai
Basavaraj Bommai

கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா, நேற்று (ஜூலை 26) தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து அடுத்த முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்காக பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்த ஒன்றிய பாஜக தலைமை வலியுறுத்தியது. அதன்படி இன்று (ஜூலை 27) பெங்களூரில் உள்ள ஹோட்டல் கேபிடலில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக உயர்மட்டக் குழுவால் (Parliamentary board) பசவராஜ் பொம்மை முதலமைச்சர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக முதலமைச்சராக பதவியேற்கும் பசவராஜ் பொம்மை
கர்நாடக முதலமைச்சராக பதவியேற்கும் பசவராஜ் பொம்மை

யார் இந்த பசவராஜ் பொம்மை?

1960 ஜனவரி 28ஆம் தேதி கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் பிறந்தவர் பசவராஜ் பொம்மை. லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த இவர், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்ஆர் பொம்மையின் மகன் ஆவார். கர்நாடக உள் துறை அமைச்சராக பதவி வகித்த இவர், ஜனதா பரிவாரில் இருந்து வந்தவர். இவர் எடியூரப்பாவின் நம்பிக்கைக்குரிய நபர் ஆவார். அடுத்த முதலமைச்சராக இவர்தான் வர வேண்டும் என எடியூரப்பா விரும்பியதாக கூறப்படுகிறது.

கர்நாடக முதலமைச்சராக பதவியேற்கும் பசவராஜ் பொம்மை
கர்நாடக முதலமைச்சராக பதவியேற்கும் பசவராஜ் பொம்மை

ஹூப்ளியில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் பி.இ. மெக்கானிக்கல் படிப்பை முடித்த இவர், மூன்று ஆண்டுகள் புனேவில் உள்ள டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

அரசியல் பயணம்:

1993ஆம் ஆண்டு ஹூப்ளியில் நடைபெற்ற மாநில ஜனதா தள இளைஞரணியின் பேரணியை தலைமை ஏற்று நடத்தியதன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.

1996 - 97 ஆகிய ஆண்டுகளில் அப்போதைய முதலமைச்சர் ஜேஹெச் படேலின் செயலாளராக பொறுப்பு வகித்தார்.

2003 ஜூலை மாதம் மஹாதயி திட்டத்தை வலியுறுத்தி தர்வாத்தில் இருந்து நார்குண்ட் வரை கிட்டத்தட்ட 232 கிமீ விவசாயிகளுடன் நடை பயணமாக சென்றார்.

2008ஆம் ஆண்டு ஜனதா தளத்தில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

2008, 2013, 2018 ஆகிய ஆண்டுகளில் பாஜகவின் கொள்கை வகுக்கும் குழுவில் உறுப்பினராக இருந்தார். இதுவரை 3 முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தற்போது மாநில உள் துறை அமைச்சராக பதவி வகித்து வந்த இவரை, ஒன்றிய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், ஜி.கே.ரெட்டி, பாஜக பொதுச்செயலாளரும் கர்நாடக மாநில பொறுப்பாளருமான அருண் சிங் அடங்கிய குழு முதலமைச்சராக தேர்வு செய்துள்ளது.

கர்நாடக முதலமைச்சராக பதவியேற்கும் பசவராஜ் பொம்மை
கர்நாடக முதலமைச்சராக பதவியேற்கும் பசவராஜ் பொம்மை

இதையும் படிங்க: கர்நாடக முதலமைச்சராக பசவராஜ் பொம்மை தேர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.