ETV Bharat / bharat

அருணாசலப் பிரதேசத்தில் தீ விபத்து, 700 கடைகள் நாசம்

author img

By

Published : Oct 26, 2022, 8:14 AM IST

அருணாசலப் பிரதேசத்தின் இட்டாநகர் பகுதியில் உள்ள பழமைமிக்க சந்தையில் நேற்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 700 கடைகள் எரிந்து நாசமாகின.

Etv Bharatஅருணாசல பிரதேச சந்தையில் தீ விபத்து - தீயணைப்புத் துறயினரின் தாமதத்தால் 700 கடைகள் எரிந்து நாசம்
Etv Bharatஅருணாசல பிரதேச சந்தையில் தீ விபத்து - தீயணைப்புத் துறயினரின் தாமதத்தால் 700 கடைகள் எரிந்து நாசம்

இட்டாநகர்: அருணாசலப் பிரதேச மாநிலத்தில் உள்ள பழமைமிக்க சந்தையில் நேற்று(அக்-25) ஏற்பட்ட தீ விபத்தில் 700க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்தில் உயிர்சேதம் ஏற்படவில்லை. மாநிலத்தின் தலைநகரானான இட்டாநகரில் இருந்து 14 கி.மீ தொலைவில் இந்த நஹர்லகுன் என்னும் பழமையான சந்தை அமைந்துள்ளது.

நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென ஒரு கடையில் தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. தீ பிடித்ததும் கடை உரிமையாளர்கள் அருகில் இருந்த தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அவர்கள் வருவதற்குள் அடுத்தடுத்த கடைகளில் தீ பரவியது. அந்த வகையில் 700 கடைகள் எரிந்து நாசமாகின. பல மணி நேரப்போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது.

இதுகுறித்து நஹர்லகுன் காவல்துறை கண்காணிப்பாளர் ஜிம்மி சிராம் கூறுகையில், ‘தீபாவளி கொண்டாட்டத்திற்காக ஏற்றப்பட்ட விளக்குகள் அல்லது பட்டாசு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது. இந்த கடைகள் மூங்கில் மற்றும் மரங்களால் செய்யப்பட்டவை என்பதால் தீ அதிவேகமாக பரவியது. நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏற்படவில்லை. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்துள்ளன எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:குஜராத்தில் இரு மதத்தவரிடையே மோதல்; ஐபிஎஸ் அதிகாரி மீது பெட்ரோல் குண்டு வீச்சு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.