ETV Bharat / bharat

இந்திய அளவில் பாஜக முதலிடம்!, தமிழகத்தில் அதிமுக முதலிடம்!- கட்சிகளின் சொத்து மதிப்பு என்ன?

author img

By

Published : Jan 29, 2022, 1:39 PM IST

இந்தியாவில் தேசிய மற்றும் மாநில கட்சிகளின் சொத்து மதிப்பு குறித்து, ஜனநாயக சீர்திருத்தங்கள் அமைப்பின் தேர்தல் கண்காணிப்பு கழகம் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின்படி 2019-2020 நிதியாண்டில் பாஜக 4,847.78 கோடியுடன் முதல் இடத்தில் உள்ளது.

இந்திய அளவில் பாஜக முதலிடம்
இந்திய அளவில் பாஜக முதலிடம்

டெல்லி:இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளின் சொத்து மதிப்பு குறித்த ஆய்வை ஜனநாயக சீர்த்திருத்த அமைப்பின் கீழ் உள்ள தேர்தல் கண்காணிப்பு கழகம் மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில் 2019-2020 ஆம் நிதியாண்டிற்கான தேசிய மற்றும் மாநில கட்சிகளின் சொத்துப்பட்டியல் வெளியாகியுள்ளது.

இதன் முடிவில் நாட்டில் ரூ.4,847.78 கோடி மதிப்பிலான சொத்துக்களுடன் பாஜக முதலிடத்தில் உள்ளது. ரூ.698.33 கோடியுடன் இரண்டாம் இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும், ரூ.588.16 கோடியுடன் மூன்றாம் இடத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிகளும் உள்ளன.

அடுத்த மூன்று இடங்களில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.569.519 கோடி, திரிணாமுல் காங்கிரஸ் ரூ.247.78 கோடி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரூ.29.78 கோடி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ரூ.8.20 கோடி என அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.

பாஜக ஃபிக்சட் டெபாசிட்டாக ரூ.3,253.00 கோடி வைத்துள்ளதாகவும், பகுஜன் சமாஜ் கட்சி தான் அந்த வகையில் ரூ.618.86 கோடி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

முதல் மூன்று இடங்களை பிடித்த கட்சிகள்
முதல் மூன்று இடங்களை பிடித்த கட்சிகள்

தமிழகத்தில் அதிமுகவிற்கு அதிக சொத்துக்கள்

மாநில கட்சிகளுக்கான சொத்துக்கள் பட்டியலில் சமாஜ்வாதி கட்சி 563 கோடியே 47 லட்சம் ரூபாயுடன் முதல் இடத்திலும், தெலங்கானாவின் ராஷ்டீரிய சமிதி கட்சி 301 கோடியே 40 லட்சம் ரூபாய் சொத்துக்களுடன் இரண்டாவது இடத்திலும், தமிழகத்தில் உள்ள அதிமுக 267 கோடியே 62 லட்சம் ரூபாய் சொத்துக்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் அதிக சொத்து மதிப்புடன் அதிமுக முதலிடத்தில் உள்ளது. திமுக 184.24 கோடியிடன் 6வது இடத்தில் உள்ளது. கட்சிகளின் டெபாசிட் தொகை கடன் சுமை என அனைத்தின் தகவலும் சேகரிக்கப்பட்டு இந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் அதிமுகவிற்கு அதிக சொத்துக்கள்
தமிழகத்தில் அதிமுகவிற்கு அதிக சொத்துக்கள்

கட்சிகளின் வைப்புத் தொகை விவரம்

  • பாஜக- 3,253 கோடி
  • பகுஜன் சமாஜ்வாதி- 61.86 கோடி
  • இந்திய தேசிய காங்கிரஸ்- 24.90 கோடி
  • சமாஜ்வாதி கட்சி - 434.219 கோடி
  • டிஆர்எஸ் - 256.01 கோடி
  • அஇஅதிமுக - 246.90 கோடி
  • திமுக - 162.425 கோடி
  • சிவ சேனா - 148.46 கோடி
  • பிஜு ஜனதா தளம் - 118.425 கோடி

இதையும் படிங்க:இந்தியாவில் சரிவை சந்திக்கும் கரோனா- குறைந்து வரும் தொற்று எண்ணிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.