ETV Bharat / bharat

ஜம்முவில் மோடியின் வருகைக்காக உச்ச கட்ட பாதுகாப்பு

author img

By

Published : Apr 23, 2022, 3:59 PM IST

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் பிரதமர் மோடியின் வருகைக்கான உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Amid multi layered security for Modis visit Jammu Palli village waits eagerly to welcome him
Amid multi layered security for Modis visit Jammu Palli village waits eagerly to welcome him

ஜம்மு: பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஏப். 24) ஜம்முவின் சம்பா மாவட்டத்தில் பஞ்சாயத்து ராஜ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். இதற்காக 100க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையொட்டி, ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவின் முக்கிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக நிகழ்ச்சி நடைபெறும் பள்ளி கிராமத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல, ஹெலிகாப்டர்கள் தரையிறக்கம், வாகனங்கள் இயக்கம் ஒத்திகைகள் நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

சர்வதேச எல்லையில் உயர் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நேற்று சஞ்வான் பகுதியில் பயங்கரவாதிகள் 2 பேர் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த முயன்றபோது அவர்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாகிஸ்தானின் சாதனையை முறியடிக்க தயாராகும் பீகார் - அமித் ஷா வருகை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.