ETV Bharat / bharat

ஞானவாபியைப் போல, ஷாஹி ஈத்கா மசூதியில் கள ஆய்வு செய்ய உத்தரவு...

author img

By

Published : Aug 29, 2022, 10:02 PM IST

கிருஷ்ண ஜென்மபூமி வழக்கில், ஷாஹி ஈத்கா மசூதியில் கள ஆய்வு செய்து, வீடியோ பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

allahabad
allahabad

மதுரா: உத்தரபிரதேச மாநிலத்தில் கிருஷ்ணர் பிறந்த இடமாக கருதப்படும் மதுராவில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதியை அகற்றக்கோரி, மதுரா நீதிமன்றத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை கடந்த மே மாதம் மதுரா நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.

இதனிடையே அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்குத் தொடரப்பட்டது. மதுராவில் மறைக்கப்பட்டுள்ள இந்து மதம் தொடர்பான தொல்பொருட்கள், பழங்கால கல்வெட்டுகள் உள்ளிட்டவை வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், ஞானவாபி மசூதியைப் போலவே, ஷாஹி ஈத்கா மசூதியிலும் கள ஆய்வு செய்து, வீடியோவாகப் பதிவு செய்ய உத்தரவிட்டது. ஆய்வு தொடர்பான அறிக்கையை 4 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை வழிபட அனுமதி கோரி சாமியார் தர்ணா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.