ETV Bharat / bharat

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம்!

author img

By ANI

Published : Sep 13, 2023, 4:51 PM IST

All party meeting for Parliement special session: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடர்பாக வருகிற 17ஆம் தேதி அன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat

டெல்லி: இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது ‘X' வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவில், “இம்மாதம் 18ஆம் தேதி தொடங்க இருக்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் தொடர்பாக, வருகிற 17ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு மற்றும் அழைப்பாணை அனைத்துக் கட்சி தலைவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். அதனைத் தொடர்ந்து கடிதமும் அனுப்பி வைக்கப்படும்” என தெரிவித்து உள்ளார்.

  • Ahead of the parliament session from the 18th of this month, an all-party floor leaders meeting has been convened on the 17th at 4.30 PM. The invitation for the same has been sent to concerned leaders through email.
    Letter to follow

    ಇದೇ ಸೆಪ್ಟೆಂಬರ್ 18 ರಿಂದ ಆರಂಭವಾಗಲಿರುವ ವಿಶೇಷ…

    — Pralhad Joshi (@JoshiPralhad) September 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி வெளியிட்ட ‘X' பதிவில், “17வது மக்களவையின் 13வது கூட்டத்தொடரும், மாநிலங்களவையின் 261வது கூட்டத்தொடருமான நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் செப்டம்பர் 18 முதல் 22ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. அமித் அம்ரித் கால் என்பதை நோக்கிய பல பயன் உள்ள ஆலோசனைகள் மற்றும் விவாதங்கள் அக்கூட்டத் தொடரில் மேற்கொள்ளப்பட உள்ளது” என தெரிவித்து இருந்தார்.

  • Special Session of Parliament (13th Session of 17th Lok Sabha and 261st Session of Rajya Sabha) is being called from 18th to 22nd September having 5 sittings. Amid Amrit Kaal looking forward to have fruitful discussions and debate in Parliament.

    ಸಂಸತ್ತಿನ ವಿಶೇಷ ಅಧಿವೇಶನವನ್ನು… pic.twitter.com/k5J2PA1wv2

    — Pralhad Joshi (@JoshiPralhad) August 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், இந்த சிறப்பு கூட்டத்தொடரில் ‘இந்தியா’ (India) என்ற பெயரை ‘பாரத்’ (Bharat) என மாற்றம் செய்வதற்கான புதிய மசோதாவை மத்திய பாஜக அரசு தாக்கல் செய்ய உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் ஈடிவி பாரத் செய்திகளுக்கு தகவல் அளித்து இருந்தன.

அதேநேரம், இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட ‘X' பதிவில், “குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து செப்டம்பர் 9 அன்று நடைபெற உள்ள ஜி20 மாநாட்டின் விருந்திற்காக (தற்போது இந்த விருந்து முடிவடைந்து விட்டது) அனுப்பப்பட்ட அழைப்பிதழில் இந்தியாவின் குடியரசுத் தலைவர் என்பதற்குப் பதிலாக பாரத்தின் குடியரசுத் தலைவர் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனவே, இந்த செய்தி உண்மைதான்” என குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், ஜி20 மாநாட்டின்போது பிரதமர் மோடி அமர்ந்திருந்த இருக்கையின் முன்னாள் இருந்த அடையாளப் பலகையில் ’பாரத்’ என குறிப்பிடப்பட்டு இருந்தது என்பதும், இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நாடாளுமன்றத்தில் ‘இந்த’ 9 விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் - சோனியா காந்தி பிரதமருக்கு கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.