ETV Bharat / bharat

இலக்கை எட்டியது ஆதித்யா எல்1.. பிரதமர் வாழ்த்து!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 6, 2024, 4:50 PM IST

Aditya L1 enters in final orbit: சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள ஆதித்யா எல்1, இன்று மாலை 4 மணியளவில் அதன் இலக்கை அடைந்துள்ளது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நாட்டு மக்கள் சார்பாக பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

Aditya L1 Indian maiden solar observatory enters in final orbit PM modi congrats isro
திட்டமிட்டபடி இலக்கை எட்டியது ஆதித்யா எல்1 - இஸ்ரோ-வுக்கு பிரதமர் வாழ்த்து..

ஸ்ரீஹரிகோட்டா: பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்நாடியாக விளங்குவது, சூரியன். சூரியனின் ஒளி இல்லை என்றால் உலகமே ஸ்தம்பித்துவிடும் என்பது நிதர்சனமான உண்மையே. அப்படிப்பட்ட சூரியன் குறித்து ஏற்கனவே அமெரிக்காவில் உள்ள நாசா (NASA) விண்வெளி மையம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

  • Finally 126 days after launch, #AdityaL1 has SUCCESSFULLY entered into a halo orbit around the L1 point!! 🏁

    Massive congrats to #ISRO for successfully parking a spacecraft at the L1 point on their first attempt! 🇮🇳

    Minutes ago, Aditya-L1 fired its thrusters for its final major… pic.twitter.com/m7o7Y1Drvh

    — ISRO Spaceflight (@ISROSpaceflight) January 6, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த நிலையில், தற்போது இந்தியா சார்பில் இஸ்ரோவும் (ISRO) இந்த ஆய்வு களத்தில் இறங்கியுள்ளது. சூரியனை ஆய்வு செய்வதற்காக கடந்த 2023 செப்டம்பர் 2ஆம் தேதி இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) இருந்து அனுப்பப்பட்ட இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு விண்கலமான ஆதித்யா எல்-1 விண்கலம், இன்று மாலை 4 மணியளவில் தனது இலக்கை அடைந்துள்ளதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • India creates yet another landmark. India’s first solar observatory Aditya-L1 reaches it destination. It is a testament to the relentless dedication of our scientists in realising among the most complex and intricate space missions. I join the nation in applauding this…

    — Narendra Modi (@narendramodi) January 6, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது குறித்து பிரதமர் மோடி தனது X பக்கத்தில், "இந்தியா மற்றொரு அடையாளத்தை உருவாக்கியுள்ளது. சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியாவிலிருந்து முதன் முறையாக அனுப்பப்பட்ட ஆதித்யா - எல்1, அதன் இலக்கை அடைந்துள்ளது. விண்வெளி குறித்த ஆராய்ச்சியில் இந்திய விஞ்ஞானிகளின் இடைவிடாத அர்ப்பணிப்பிற்கு இது சான்றாக அமைந்துள்ளது. இந்திய மக்களுடன் இணைந்து பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். மனித குலத்தின் நலுனுக்கான, அறிவியலின் புதிய எல்லைகளை தொடர்வோம்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நாசா உதவியுடன் சந்திரனில் தரையிறங்க தயாராகும் 2 அமெரிக்க விண்வெளி நிறுவனங்கள்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.