ETV Bharat / bharat

INDIA கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்கும் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 21, 2023, 7:34 PM IST

AAP will join third meeting of INDIA alliance in Mumbai: மும்பையில் நடைபெற உள்ளா INDIA கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி கலந்து கொள்ளும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

INDIA கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில் ஆம் ஆத்மி - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
INDIA கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில் ஆம் ஆத்மி - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், இந்த மாத இறுதியில் மும்பையில் நடைபெற உள்ள INDIA (இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணி) கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி பங்கேற்கும் என அறிவித்து உள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “நாங்கள் மும்பைக்குச் செல்ல இருக்கிறோம். எங்களது நிலைப்பாடு என்ன என்பது குறித்து கூட்டத்திற்கு பிறகு உங்களுக்கு (ஊடகங்களுக்கு) தெரிவிக்கப்படும்” என தெரிவித்து உள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் தலைவர் டெல்லி நகரத்தில் உள்ள 7 சீட்களை ஒதுக்குமாறு கேட்டதற்குப் பிறகு ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையேயான வார்த்தை போருக்கு அடுத்ததாக இந்த அறிவிப்பு வந்து உள்ளது. மேலும், காங்கிரஸ் தரப்பில் காங்கிரஸ் தலைவர் இது குறித்து கூட்டத்தில் விவாதிக்கவில்லை என டெல்லி காங்கிரஸ் பொறுப்பாளர் தீபக் பபாரியா விளக்கம் அளித்து உள்ளார்.

அது மட்டுமல்லாமல், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சட்டீஸ்கர் மற்றும் மத்தியப்பிரதேசத்தில், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவற்றை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதை வைத்து பேசியிருந்தார். அதிலும், மத்தியப்பிரதேச மாநிலம் சாட்னாவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “கடந்த 75 வருடங்களாக மத்தியப்பிரதேச மக்கள் இரண்டு கட்சிகளிடமும் (காங்கிரஸ், பாஜக) முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், இதுவரை மின்சாரம் கிடைக்கவில்லை.

உங்களுக்கு மின்சாரம் வேண்டும் என்றால் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்கு அளியுங்கள். உங்களுக்கு மின் தடை வேண்டும் என்றால், அந்த இரு கட்சிகளுக்கு வாக்கு அளியுங்கள்” என பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, தேசியத் தலைநகர் யூனியன் மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்காததால் ஆம் ஆத்மி கட்சி, கடந்த ஜூன் 23 அன்று பிகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற INDIA கூட்டணியின் முதல் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

ஆனால், கடந்த ஜூலை 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற INDIA கூட்டணியின் இரண்டாவது கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி பங்கேற்று இருந்தது. இந்த நிலையில், மூன்றாவது கூட்டத்திலும் ஆம் ஆத்மி கட்சி பங்கேற்க உள்ளது.

இதையும் படிங்க: 'இந்தியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? - பி.எல்.புனியா கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.