ETV Bharat / bharat

வரலாற்றில் மறைக்கப்பட்ட 1857 ஹிசார் புரட்சி!

author img

By

Published : Oct 17, 2021, 6:36 AM IST

பிரிட்டிஷ் படைகள் கோட்டைக்குள் இருந்தன, கிளர்ச்சியாளர்கள் வெளியே இருந்தனர். இதன் விளைவாக, பல புரட்சியாளர்கள் கொல்லப்பட்டனர்; அவர்களின் வாள்களால் துப்பாக்கி மற்றும் பீரங்கிகளுக்கு முன்னால் நிற்க முடியவில்லை. இந்தப் போரில் 438 புரட்சியாளர்கள் வீரமரணம் அடைந்தனர். அதில் 235 தியாகிகளின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. மீதமுள்ளவர்களின் உடல்கள் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து சிதறின, அடையாளம் கண்டுபிடிக்கமுடியவில்லை.

Hisar
Hisar

ஹிசார் (ஹரியானா): நாம் பெற்ற சுதந்திரத்தின் மதிப்பை உணர, நாட்டின் விடுதலைக்காக போராடி உயிர் நீத்த வீரர்களின் வரலாற்றை அறிந்துகொள்வது அவசியம்.

இவர்கள், தாய் நாட்டின் விடுதலைக்காக அனைத்து தடைகளையும் தாண்டி, இறுதி மூச்சுவரை தங்களை போராட்டங்களில் ஈடுபடுத்திக்கொண்டு உச்சபட்ச தியாகத்தை கொடுத்தார்கள்.

ஹிசார் சிப்பாய் புரட்சி

நாடு 1947இல் சுதந்திரம் பெற்றிருக்கலாம். ஆனால் நமது விடுதலை போராட்டம் நீண்ட நெடியது. அதில், 1857இல் நமது வீரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஈடுபட்ட கிளர்ச்சி மிக முக்கியமானது. இதுவே வரலாற்றில், “நாட்டின் விடுதலைக்கான முதல் போர்” என்று அறியப்படுகிறது.

நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடிய நாம், வரலாற்றில் பெரும்பாலும் அறியப்படாத 1857 ஹிசார் புரட்சி நாயகர்கள் குறித்து அறிவோம். மே 29, 1857 இல், கிளர்ச்சிப் படைகள் ஹிசாரைக் கைப்பற்றி சுதந்திர பகுதியாக அறிவித்தன. இருப்பினும் சண்டை முடியவில்லை. இந்திய வீரர்கள் மட்டுமின்றி ஆங்கிலேய சிப்பாய்களும் கொல்லப்பட்டனர். பிரிட்டிஷ் வீரர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இது குறித்து வரலாற்று ஆராய்ச்சியாளர் விவரிக்கிறார்.

மாபெரும் புரட்சி போராட்டம்

பிரிட்டிஷ் படைகள் விரைவில் மீண்டும் ஒருங்கிணைந்து கிளர்ச்சிப் படைகளைத் தாக்கத் திட்டமிட்டன. கடைசி முகலாய பேரரசரான பகதூர் ஷா ஜாஃபரின் குடும்பத்தைச் சேர்ந்த அசாம் கான் தலைமையில் கிளர்ச்சிப் படைகள் வழிநடத்தப்பட்டன.

பிரிட்டிஷ் படைகள் துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகள் என நன்கு ஆயுதம் தாங்கிய வீரர்களை கைவசம் வைத்திருந்தனர். மேலும், பிரிட்டிஷ் படைகள் கோட்டைக்குள் இருந்தன, கிளர்ச்சியாளர்கள் வெளியே இருந்தனர். இதன் விளைவாக, பல புரட்சியாளர்கள் கொல்லப்பட்டனர்; அவர்களின் வாள்களால் துப்பாக்கி மற்றும் பீரங்கிகளுக்கு முன்னால் நிற்க முடியவில்லை. இந்தப் போரில் 438 புரட்சியாளர்கள் வீரமரணம் அடைந்தனர்.

123 புரட்சியாளர்கள் கொடூரக் கொலை

அதில் 235 தியாகிகளின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. மீதமுள்ளவர்களின் உடல்கள் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து சிதறின, அடையாளம் கண்டுபிடிக்கமுடியவில்லை.

இந்தப் போரில் மோசமான சம்பவம் ஒன்றும் அறங்கேறியது. ஆங்கிலேய தளபதி அளித்த உத்தரவின்பேரில், 123 புரட்சியாளர்கள் சாலை உருளைகளின் கீழ் நசுக்கப்பட்டனர்.

சுதந்திர விதைகள்

1857 மே 30 முதல் ஆகஸ்ட் 19ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் வரலாற்றில் சிறிது காலம் நடந்தாலும் ஹிசார் புரட்சி மிக முக்கியமானது. நாட்டின் விடுதலையில் இந்த வீரர்கள் அளித்த அளப்பரிய தியாகம் என்றென்றும் நினைவுகூரப்படும்.

வரலாற்றில் மறைக்கப்பட்ட 1857 ஹிசார் புரட்சி!

தங்களின் உச்சப்பட்ச தியாகத்துக்காக இவர்கள் என்றென்றும் பாராட்டப்படுவார்கள். ஹிசார் வீரர்கள் படுகொலை ஆங்கிலேய ஆட்சியில் 1857இல் நடந்த அசாதாரணமான நிகழ்வு. இது இந்திய சமூகத்தின் பல பிரிவுகளை ஒன்றிணைத்தது. விரும்பிய இலக்கை அடைய கிளர்ச்சி தவறினாலும், அது இந்திய தேசத்தில் சுதந்திர விதைகளை விதைத்தது.

இதையும் படிங்க : ஒருங்கிணைந்த இந்தியாவை ஒரே கல்லில் காட்டும் பாரத் மந்திர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.