ETV Bharat / bharat

பாஜக எம்எல்ஏவை தாக்கிய வழக்கில் உ.பியில் 6 போலீசாருக்கு ஒரு நாள் சிறை

author img

By

Published : Mar 3, 2023, 10:57 PM IST

Updated : Mar 3, 2023, 11:09 PM IST

2004ஆம் ஆண்டு பாஜக எம்எல்ஏ சலில் பிஷ்னோ தர்ணாவில் ஈடுபட்டபோது அவர் மீது போலீசார் தடியடி நடத்தியதில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த சிறப்புரிமை மீறல் வழக்கில் 6 போலீசாருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பாஜக எம்எல்ஏவை தாக்கிய வழக்கில் உ.பியில் 6 போலீசாருக்கு சிறை தண்டணை!
பாஜக எம்எல்ஏவை தாக்கிய வழக்கில் உ.பியில் 6 போலீசாருக்கு சிறை தண்டணை!

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசம் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் கீழ், சிறப்புரிமை மீறல் தொடர்பான சிறப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. கிட்டத்தட்ட 58 ஆண்டுகளுக்குப் பிறகு, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் சுரேஷ் குமார் கன்னாவின் முன்மொழிவின் பேரில், எம்.எல்.ஏ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. ஹவுஸ் நீதிமன்றத்தில் 2004ஆம் ஆண்டு சிறப்புரிமை மீறல் வழக்கில் 6 போலீசார் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது.

தண்டனை பெற்ற 6 காவலர்களும் சட்டசபை வளாகத்தில் கட்டப்பட்ட சிறப்பு லாக்கப்பில் அடைக்கப்பட்டனர். சிறையிலேயே காவலர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் ஏற்பாடு செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சட்டசபை நீதிமன்ற நடவடிக்கைகளின்போது, சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

தண்டனை விதிக்கப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களில், அப்போதைய பாபுபூர்வாவின் அதிகாரியான அப்துல் சமத், அப்போதைய சப் இன்ஸ்பெக்டர் திரிலோகி சிங், கான்ஸ்டபிள்கள் சோட் சிங் யாதவ், வினோத் மிஸ்ரா, மெஹர்பன் சிங் யாதவ் ஆகியோர் அடங்குவர்.

2004ஆம் ஆண்டு, போலீஸ் அதிகாரிகள் கான்பூரில் பாஜக தர்ணாவின்போது அவர் மீது தடியடி நடத்தினர். இந்த தடியடியின்போது எம்எல்ஏ சலில் பிஷ்னோவின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. 2004இல் உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருந்தது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் சுரேஷ் கன்னா, சிறப்புரிமை மீறல் வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை விதிக்க முன்மொழிந்தார். அதை சபை ஏற்றுக்கொண்டது.

விசாரணையின்போது, அப்போதைய சிஓ அப்துல் சமத் மற்றும் பலர், அரசு கடமைகளை நிறைவேற்றுவதில் நடந்த தவறுகளுக்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறினர். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் சுரேஷ் கன்னா கூறியதாவது, ”மக்கள் பிரதிநிதிகளை நாம் அனைவரும் மதிப்பது அவசியம். ஆனால் யாரையும் இழிவுபடுத்த இந்த அதிகாரிகளுக்கு உரிமை இல்லை. குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்” என்று சட்டப்பேரவைத் தலைவரிடம் முறையிட்டார்.

இதற்காக, அவர்களுக்கு ஒரு நாள் தண்டனையாக அதாவது வெள்ளிக்கிழமை இரவு 12 மணி வரை,போலீஸ் காவல் விதிக்க முன்மொழியப்பட்டது. இது தொடர்பாக சட்டப்பேரவைத் தலைவர் சதீஷ் மஹானா கூறுகையில், ‘பேரவையின் முடிவு முக்கியமானது. அதன் செய்தி தொலைநோக்குப் பார்வையாக இருக்கும். இந்த விவகாரம் சிறப்புரிமைக் குழுவால் முழுமையாக விசாரிக்கப்பட்டது’ என்றார்.

தொடர்ந்து குற்றவாளிகள் அனைவருக்கும் ஒரு நாள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என்பதன் பேரில், குற்றவாளிகள் அனைவரையும் சட்டசபையில் உள்ள அடையாள சிறையில் அடைக்க சட்டசபை சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: மெஹபூபா முப்தியின் பாஸ்போர்ட் விவகாரம் - டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Last Updated : Mar 3, 2023, 11:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.