ETV Bharat / bharat

161 உயிர்களை பறித்த மனிதக் கழிவுகள் அகற்றம்!

author img

By

Published : Apr 6, 2022, 7:53 PM IST

கடந்த 3 ஆண்டுகளில் மனிதக் கழிவுகள் அகற்றம், கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தவர்கள் என 161 பேர் தங்களின் இன்னுயிரை இழந்துள்ளனர்.

Govt
Govt

புது டெல்லி : மத்திய அரசின் வரவு செலவு திட்ட அறிக்கை மீதான இரண்டாவது அமர்வு தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் விரேந்திர குமார் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், “கடந்த 3 ஆண்டுகளில் மனிதக் கழிவுகள் அகற்றம் மற்றும் கழிவுநீர் தொட்டி சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபட்ட 161 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்” எனத் தெரிவித்தார். அந்த அறிக்கைகளின்படி, தற்போது யாரும் கையால் துப்புரவு பணியில் ஈடுபடவில்லை, ஆனால் 2013 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட இரண்டு கணக்கெடுப்புகளில் மொத்தம் 58,098 பேர் இந்தப் பணியில் நேரடியாக ஈடுபடுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அதில், “2013 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் கையால் சுத்தம் செய்பவர்களை அடையாளம் காண இரண்டு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த கணக்கெடுப்பின் போது 58,098 கையால் சுத்தம் செய்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் கையால் சுத்தம் செய்பவர்கள் உத்தரப் பிரதேசத்தில் (32473) முதலிடத்தில் உள்ளனர்.

அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (6325) மற்றும் உத்தரகாண்ட் (4988) ஆகிய மாநிலங்கள் உள்ளன. 2013 கை துப்புறவு பணியாளர்கள் தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் கையால் நேரடியாக துப்புரவு செய்ய தடை விதித்துள்ளது என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : இந்தியாவில், 3 ஆண்டுகளில் 390 லாக்அப் படுகொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.