ETV Bharat / state

கோடையில் புதிய பேக்கேஜ்கள் அறிமுகம்.. சென்னையைக் கவர்ந்த ராமோஜி ஃபிலிம் சிட்டி அரங்கம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 17, 2024, 5:44 PM IST

Ramoji Film City: சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறும் சுற்றுலாத்துறை கண்காட்சியில், ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃப்லிம் சிட்டி சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டது. பொதுமக்கள் அதன் சுற்றுலா குறித்த பேக்கேஜ்கள் மற்றும் விவரங்களை ஆர்வமுடன் கேட்டுச் சென்றனர்.

ராமோஜி பிலிம் சிட்டி அரங்கை கண்டுகளித்த சுற்றுலா ஆர்வலர்கள்
சென்னையில் சுற்றுலாத்துறை கண்காட்சி

சென்னையில் சுற்றுலாத்துறை கண்காட்சி

சென்னை: 3 நாட்கள் நடைபெற்ற சுற்றுலாத்துறை கண்காட்சியை பார்வையிட வந்த பொதுமக்கள், ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃப்லிம் சிட்டி சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை கண்டுகளித்தனர். இந்நிலையில், கோடை காலத்தில் வரும் பொதுமக்களைக் கவரும் வகையில் புதிய அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக, அதன் வர்த்தகப் பிரிவைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் Travel & Tourism Fair நிறுவனத்தின் 24வது கண்காட்சியாக, 'சுற்றுலாத்துறை கண்காட்சி’ கடந்த மார்ச் 15ஆம் தேதி துவங்கி, மார்ச் 17ஆம் தேதியான இன்று வரையில் 3 நாட்களுக்கு நடைபெற்றது. தென்னிந்தியாவின் மிகப்பெரிய பிராந்திய பயண வர்த்தக கண்காட்சியாக உருவெடுத்த இந்த கண்காட்சி, கோடை விடுமுறை பயண சீசனுக்கு முன்கூட்டியே அமைக்கப்பட்டதால், திட்டமிடுவதற்கும் சரியான வாய்ப்பாக அமைந்துள்ளது.

இந்த கண்காட்சியில் பீகார், ஒடிசா, உத்தரகாண்ட், கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி, குஜராத், ஜார்க்கண்ட் மற்றும் தெலங்கானா உள்ளிட்ட பல மாநில சுற்றுலா வாரியங்களும், தனியார் ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா நடத்துநர்களின் குறிப்பிடத்தக்க பிரதிநிதித்துவத்துடன் பெரிய அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

மேலும், நேபாளம் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டன. இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம், அதன் தொடர் முயற்சிகளை முன்னிலைப்படுத்தியும் காட்சிப்படுத்தியது. கண்காட்சியில் ஒவ்வொரு சுற்றுலா நிறுவனமும், அதன் சுற்றுலா பேக்கேஜ் குறித்து காட்சிப்படுத்தின. இங்கு அமைக்கப்பட்டுள்ள ராமோஜி ஃப்லிம் சிட்டி அரங்கை, சுற்றுலா வர்த்தகத் துறையினர் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து விவரங்களைக் கேட்டுச் சென்றனர்.

இது குறித்து ராமோஜி ஃப்லிம் சிட்டியின் வர்த்தகப் பிரிவைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் கூறும்போது, “சென்னையில் அமைக்கப்பட்ட கண்காட்சியை அதிகளவில் மக்களும், வர்த்தகர்களும் பார்த்து செல்கிறனர். இதனால் வணிகத்தில் மேம்பாடு கிடைக்கும் என நம்புகிறோம். ராமோஜி பிலிம் சிட்டியில், கோடை காலத்தில் வரும் பொதுமக்களை கவரும் வகையில் புதிய அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது. மேலும், பிலிம் குறித்த படிப்பும் வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் இருந்து நேரடியாக பிலிம் சிட்டிக்கு வந்து செல்வதற்காக, எங்களின் நிறுவனத்தின் சார்பில் மண்டல அளவில் ஏஜெண்டுகளையும் நியமித்துள்ளோம். கோடை காலத்தில் வருபவர்கள் பிலிம் சிட்டியில் இருந்து பிற பகுதிகளை பார்வையிடவும் ஏற்பாடுகளை செய்துள்ளோம். தங்கும் வசதிகளும், தரமான உணவினையும் வழங்கி வருகிறோம்” என தெரிவித்தார்.

இந்த கண்காட்சி அரங்கில் 3 நாடுகள் மற்றும் 16 இந்திய மாநிலங்களில் இருந்து சுற்றுலாத்துறையைச் சேர்ந்தவர்கள் 160 அரங்குகளை அமைத்திருந்தனர். கண்காட்சியில் ஒவ்வொரு சுற்றுலா நிறுவனமும், தங்களின் சுற்றுலா குறித்து காட்சிப்படுத்தி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 5 நாட்களாக குன்னூரில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீ.. ஹெலிகாப்டரை கொண்டு அணைக்கும் முயற்சி தீவிரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.