ETV Bharat / state

"நானாவது கல்லை காட்டுகிறேன், நீங்கள் பல்லை காட்டுகிறீர்கள்.." - ஈபிஎஸ்-க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி! - Udhayanidhi about EPS

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 26, 2024, 8:05 PM IST

Udhayanidhi stalin campaign: “நானாவது செங்கல்லைத்தான் காட்டுகிறேன், எடப்பாடி மோடியிடம் பல்லைக் காட்டுகிறார்” என திருப்பத்தூரில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமரர்சித்துள்ளார்.

பிரச்சாரத்தின்போது உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
நானாவது கல்லை காட்டுகிறேன், ஆனால் நீங்கள் பல்லை காட்டுகிறீர்கள்

திருப்பத்தூர்: திமுக சார்பில் திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக சி.என்.அண்ணாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார். திருவண்ணாமலை தொகுதிக்கு திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய இரண்டு தொகுதிகள் உள்ளன. இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருப்பத்தூருக்கு வருகை தந்து, ஜோலார்பேட்டை அடுத்த ஆசிரியர் நகர் பகுதியில் சி.என்.அண்ணாதுரைக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது கூட்டத்தில் அவர் பேசுகையில், “குறைந்தது 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அண்ணாதுரையை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அப்படி ஒரு வெற்றிபெறும் பட்சத்தில், மாதத்தில் இருமுறை திருவண்ணாமலைக்கு வந்து, தொகுதி பிரச்சினைகளை கேட்டறிவேன். கரோனோ காலத்தில் இந்தியாவில் அதிக தடுப்பூசி போட்டுக் கொண்ட மாநிலம் என நாம் பெயர் பெற்றோம்.

பெண்கள் இலவசப் பயணம் மேற்கொள்ளும் பேருந்தை ஸ்டாலின் பேருந்து என அழைக்கின்றனர். கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலம் வழங்குவது போலவே, மாணவர்களுக்கும் வழங்கும் திட்டமும் உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் விண்ணப்பித்த அனைத்து மகளிருக்கும் கலைஞர் உரிமைத் தொகை வழங்கப்படும்.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட வைக்கப்பட்டிருந்த செங்கலை நான் எடுத்து வந்து விட்டேன். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கல்லை தூக்கிக்கொண்டு வருகிறார் என என்னை குற்றம் சாட்டி வருகிறார். நானாவது கல்லை காட்டுகிறேன், ஆனால் நீங்கள் பல்லை காட்டுகிறீர்கள், அதுவும் மோடியிடம்” என மோடி மற்றும் எடப்பாடி சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை அனைவரும் மத்தியில் காண்பித்தார்.

தொடர்ந்து அவர், “தமிழ்நாட்டு மக்கள் இனிமேல் பிரதமர் நரேந்திர மோடியை பெயரைச் சொல்லி கூப்பிடாதீர்காள், மிஸ்டர் 29 பைசா என்றுதான் அழைக்க வேண்டும்” என பேசினார். இதற்கிடையில், தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஆம்புலன்ஸ் வந்ததால் அவசர அவசரமாக பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அவர் புறப்பட்டார். அதனைத் தொடர்ந்து. ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார்.

இதையும் படிங்க: 'திமுகவிற்கும், அதிமுகவிற்கும் தான் தேர்தலில் போட்டி..திமுகவின் ஊழல் பட்டியல் ரெடி' - ஈபிஎஸ் ஆவேசம் - Edappadi K Palaniswami

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.