ETV Bharat / state

மத்திய, மாநில அரசின் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி - தமிழக அரசு அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 27, 2024, 5:08 PM IST

Free coaching class for govt exams: டி.என்.பி.எஸ்.சி, எஸ்.எஸ்.சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்குக் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசு தேர்வுகளுக்கு இலவச பயிற்சி மையம்
அரசு தேர்வுகளுக்கு இலவச பயிற்சி மையம்

சென்னை: "டி.என்.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., ஐ.பி.பி.எஸ்., அர்.ஆர்.பி உள்ளிட்ட போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்குக் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன எனவும் அதற்கு விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்களைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “டி.என்.பி.எஸ்.சி (TNPSC), எஸ்.எஸ்.சி (SSC), ஐ.பி.பி.எஸ் (IBPS), அர்.ஆர்.பி (RRB) ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்குத் தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், சென்னை பழைய வண்ணாரப் பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்களுக்கும், சென்னை சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 இடங்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.

மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங்கள் பெற்று, சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை ஆறு மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: தேனியில் மகள் பவதாரிணி உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய இளையராஜா!

பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் தேர்வர்கள் குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 01.01.2024 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேற்படி, போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவும் தங்கும் வசதிகளும் இல்லை. பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள் www.cecc.in வாயிலாக 29.01.2024 முதல் 12.02.2024 வரை விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-25954905 மற்றும் 044-28510537 ஆகிய தொலைப்பேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப தேர்வர்கள் தெரிவு செய்யப்பட்டு தேர்வர்களின் விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும், மார்ச் மாத முதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "நகராட்சி வேண்டாம்; ஊராட்சியே போதும்" - கோவை, கிட்டாம்பாளையம் கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.