ETV Bharat / state

"எந்த ஜென்மத்திலும் தமிழ்நாட்டில் பாஜகவின் கனவு பலிக்காது" - சசிகாந்த் செந்தில் பேட்டி! - Sasikanth Senthil

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 24, 2024, 10:50 PM IST

Tiruvallur Congress candidate Sasikant senthil: எந்த ஜென்மத்திலும் தமிழ்நாட்டில் பாஜகவின் கனவு பலிக்காது என திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் தெரிவித்துள்ளார்.

tiruvallur-congress-candidate-sasikant-said-bjp-dream-will-not-come-true-in-tn-in-any-generation
எந்த ஜென்மத்திலும் தமிழ்நாட்டில் பாஜகவின் கனவு பலிக்காது - திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த்

சென்னை: திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னால் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில், டெல்லியிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, "வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திருவள்ளூர் தனித் தொகுதியில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட கட்சித் தலைமை தேர்ந்தெடுத்துள்ளது.

தற்போது வரவுள்ள தேர்தல் அனைவருக்கும் முக்கியமான தேர்தல். காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்லாமல், ஜனநாயகத்திற்கும் முக்கியமான தேர்தலாக உள்ளது. வரலாறு காணாத வெற்றியை ஜனநாயக கட்சிகளுக்கு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

பாஜகவினர் விமர்சனத்தில் குறைந்தபட்ச நம்பிக்கைத்தன்மை கூட இருக்காது. அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள தேவை இல்லை. தமிழ்நாட்டு மக்கள் மிகவும் தெளிவான மக்கள். எந்த சித்தாந்தத்திற்கு ஓட்டுப் போட வேண்டும் என மக்களுக்குத் தெரியும்.

அண்ணாமலை பேசுவதையெல்லாம், தமிழ்நாட்டில் யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. அரசியல் மாற்றம் ஏற்படத் தேவை உள்ளது. இளைஞர்களை வைத்து கட்டமைப்பதற்கான ஒரு தளத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. எனது தொகுதியில் இருக்கும் பிரச்னைகளைத் தாண்டியும், அவர்களுக்கு அரசியலில் பங்கீடு கொடுக்க வேண்டியதற்கான முயற்சி எடுப்பேன். எந்த ஜென்மத்திலும் தமிழ்நாட்டில் பாஜகவின் கனவு பலிக்காது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாஜக வேட்பாளராக நடிகை கங்கனா ரனாவத் போட்டி.. வெளியானது பாஜகவின் 5ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்! - BJP Candidate Kangana Ranaut

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.