ETV Bharat / state

ரசிகர்களுக்குத் திரை விருந்து; மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய முக்கியப் படங்கள் நாளை ரிலீஸ்! - Tamil movie release tomorrow

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 9, 2024, 10:55 PM IST

Tamil theatre release movies: இயக்குநர் அமீர், நடிகர் கவின், நடிகர் அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த முக்கிய தமிழ் திரைப்படங்கள் நாளை வெளியாகவுள்ளது.

நாளை வெளியாகவுள்ள திரைப்படங்களின் போஸ்டர்
நாளை வெளியாகவுள்ள திரைப்படங்களின் போஸ்டர் (Credits to Actor Kavin, Adham baba, Arjun das "X" pages)

சென்னை: தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு தொடங்கிய கடந்த நான்கு மாதங்களில் குறிப்பிடத்தக்க வெற்றிப் படங்கள் எதுவும் வெளியாகவில்லை என திரை ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தது. இதையடுத்து சமீபத்தில் ரீ-ரிலீஸ் ஆன விஜய் நடித்த 'கில்லி' திரைப்படம் பார்வையாளர்களை மீண்டும் திரையரங்குகள் நோக்கி வரவழைத்தது.

அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் வெளியான 'அரண்மனை 4' திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த நிலையில் இந்த வாரம் ஸ்டார், உயிர் தமிழுக்கு, ரசவாதி உள்ளிட்ட படங்கள் திரையில் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் உள்ளனர்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

உயிர் தமிழுக்கு: ஆதம்பாவா இயக்கத்தில் அமீர் நடித்துள்ள படம் 'உயிர் தமிழுக்கு'. அரசியல் நையாண்டி படமாக உருவாகியுள்ள இப்படம், நாளை திரைக்கு வருகிறது. 'வட சென்னை' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த அமீர் இப்படத்தில் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அரசியல் நையாண்டி படமாக இது எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு வித்யாசாகர் இசை அமைத்துள்ளார்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ஸ்டார்: 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில், நடிகர் கவின் நடித்துள்ள திரைப்படம் 'ஸ்டார்'. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானதுடன் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். தனது அப்பா சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையிலிருந்த நிலையில், அவருக்கு ஏற்பட்ட சில அவமானங்களை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் இளன். இந்நிலையில் இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ரசவாதி: 'மௌனகுரு', 'மகாமுனி' உள்ளிட்ட படங்களை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ரசவாதி'. அர்ஜுன் தாஸ், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார். சாந்தகுமாரின் வித்தியாசமான திரைக்கதை இப்படத்தில் இருக்கும் என்று இப்படத்தின் ட்ரைலர் உணர்த்துகிறது. இப் படம் நாளை வெளியாக உள்ளது. மேலும் 'மாயவன் வேட்டை' மற்றும் 'பிளானட் ஆஃப் ஏப்ஸ்' ஆகிய டப்பிங் படமும் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

இதையும் படிங்க: இயக்குநர் வசந்த பாலனின் "தலைமைச் செயலகம்" புதிய சீரியஸின் டிரெய்லர் வெளியீடு.. - Thalaimai Seyalagam Trailer

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.