ETV Bharat / state

கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் மீது நாதகவினர் தாக்குதல்? - கிருஷ்ணகிரியில் நடந்தது என்ன? - krishnagiri naam tamilar katchi

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 28, 2024, 9:54 PM IST

Krishnagiri Naam Tamilar Katchi: கிருஷ்ணகிரி தொகுதியில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடும் திராவிட தெலுங்கு தேசம் கட்சி தலைவர் ஆறுமுகத்தின் வேட்பு மனுவை வாபஸ் பெறக்கோரி நாம் தமிழர் கட்சியினர் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

கிருஷ்ணகிரி தொகுதி

கிருஷ்ணகிரி: நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னம், தேர்தல் ஆணையம் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஐக்கிய மக்கள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. பாரதிய ஐக்கிய மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள திராவிட தெலுங்கு தேசம் கட்சி, கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில், அக்கட்சியின் தலைவரான, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த எச்சனஅள்ளியைச் சேர்ந்த ஆறுமுகம் வேட்புமனு செய்துள்ளார்.

இந்த கூட்டணி தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 13 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகத்தில் ஆறுமுகத்தின் வேட்புமனு ஏற்கப்பட்டு, கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சியினர் வேட்புமனுவை வாபஸ் பெற்றுக் கொள்ள மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வித்யா ராணி வீரப்பனுடன் இருந்த நாம் தமிழர் கட்சியினர், ஆறுமுகத்தை கிருஷ்ணகிரி அடுத்த போலுப்பள்ளி என்னுமிடத்தில் காரை வழிமறித்து, 10 இருசக்கர வாகனத்தில் வந்த 20க்கும் மேற்பட்டோர் தாக்கியதாகவும், பின்னர் ஆறுமுகம் ஒசூரைச் சேர்ந்த மற்றொரு சுயேச்சை வேட்பாளருடன் தப்பித்து ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறியுள்ளார். ஆறுமுகத்திற்கு உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதால், குருபரப்பள்ளி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

இதையும் படிங்க: நாதக கிருஷ்ணகிரி வேட்பாளராக வீரப்பனின் மகள் வித்யா போட்டி! - Veerappan Daughter Vidya

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.