ETV Bharat / state

“குப்பனும் சுப்பனும் பச்சை மையால் கையெழுத்திடும் நிலையை உருவாக்கியவர்” - ராஜீவ் காந்திக்கு செல்வப்பெருந்தகை புகழஞ்சலி! - Rajiv Gandhi Memorial Day

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 21, 2024, 3:13 PM IST

Rajiv Gandhi Memorial Day: விஞ்ஞான புரட்சியின் மூலம் மட்டுமே வறுமையை ஒழிக்க முடியும் என ராஜீவ் காந்தி சூளுரைத்து அதனை செயல்படுத்திக் காட்டியவர் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ராஜீவ் காந்திக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

Rajiv Gandhi Memorial Day at Sriperumbudur
ராஜுவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு மலர் தூவி மரியாதை செலுத்திய செல்வப்பெருந்தகை (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

ராஜுவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு மலர் தூவி மரியாதை செலுத்திய செல்வப்பெருந்தகை (Video Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33-வது நினைவு தினம் மே 21ஆம் தேதியான இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. மேலும், ராஜீவ் காந்தியின் நினைவு தினமான இன்று, பயங்கரவாத எதிர்ப்பு தினமாகவும் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜுவ் காந்தி நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் மூத்த தலைவர்களான திருநாவுக்கரசு, கே.வி.தங்கபாலு, விஜய் வசந்த் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும், அவ்வளாகத்தில் வீணைக் கச்சேரி மூலம் புகழ் இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் நடைபெற்றது. இந்த நிகழ்வினைத் தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதிமொழியை, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வாசிக்க அனைத்து காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழி ஏற்றனர்.

இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் சிறந்த மதிப்பெண் எடுத்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது. இதன் பின்னர், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "விஞ்ஞான புரட்சியின் மூலம் மட்டுமே வறுமையை ஒழிக்க முடியும் என ராஜீவ் காந்தி சூளுரைத்து அதனை செயல்படுத்திக் காட்டியவர். குப்பனும், சுப்பனும் சாமானிய கிராம மக்கள் பஞ்சாயத்து ராஜ் சட்டம் மூலம் தலைநிமிர்ந்து பச்சை மையில் கையெழுத்திடும் நிலைக்கு அவர்களை உருவாக்கியதை என்றைக்குமே மறுக்க முடியாது. அவருடைய கனவுகளை வருங்காலத்தில் நினைவாக்க உறுதி ஏற்றுள்ளோம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: திருச்சியில் விரைவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை திறப்பு:எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.