ETV Bharat / state

சென்னையில் இரண்டு நாட்களுக்கு குளு குளு தான்..! - TN Rain today

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 11, 2024, 3:02 PM IST

TAMILNADU WEATHER REPORT: சென்னையில் வரும் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை தொடர்பான புகைப்படம்
மழை தொடர்பான புகைப்படம் (CREDIT - ETV Bharat Tamil Nadu)

சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது எனவும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை : அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தின் அநேக மாவட்டங்களில் பொதுவாக இயல்பை ஒட்டியும் இருந்தது. கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருந்தது. அதிக பட்ச வெப்பநிலை ஈரோடு மற்றும் வேலூரில் 40.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 36 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34 டிகிரி முதல் 37 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 22 டிகிரி முதல் 29 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக, சென்னை மீனம்பாக்கத்தில் 37.2 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 36.4 டிகிரி செல்சியஸ் (-1.0° செல்சியஸ்) பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (மே 11), தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை (மே 12), தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மே 13ம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, நாமக்கல், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மே 14ம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மே 15ம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு, ,திருப்பூர், சேலம், நாமக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மே 16 மற்றும் 17ம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: இன்று முதல் மே 15ம் தேதி, அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டியும், ஓரிரு இடங்களில் 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 40 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34 டிகிரி முதல் 37 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்: இன்று முதல் மே 15ம் தேதி, காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 45 முதல் 55 சதவீதமாகவும், மற்ற நேரங்களில் 60 முதல் 85 சதவீதமாகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 60 முதல் 85 சதவீதமாகவும் இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை: பென்னாகரம் (தர்மபுரி) 10, ஒகேனக்கல் (தர்மபுரி) பகுதியில் 8 செ.மீ மழையும், சமயபுரம் (திருச்சிராப்பள்ளி) பகுதியில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. உசிலம்பட்டி (மதுரை) , முசிறி (திருச்சிராப்பள்ளி) பகுதிகளில் தலா 6 செ.மீ மழையும் , அம்மாபேட்டை (ஈரோடு), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), மேட்டுப்பட்டி (மதுரை), கல்லந்திரி (மதுரை), தேவிமங்கலம் (திருச்சிராப்பள்ளி), புத்தன் அணை (கன்னியாகுமரி), மேல் கூடலூர் (நீலகிரி), அருப்புக்கோட்டை (விருதுநகர்) தலா 5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

ஆலங்குடி (புதுக்கோட்டை) , பெருங்களூர் (புதுக்கோட்டை) , புலிப்பட்டி (மதுரை) தலா 4 செ.மீ மழையும், திருமயம் (புதுக்கோட்டை), கோவில்பட்டி (தூத்துக்குடி), திருவாடானை (ராமநாதபுரம்), கயத்தார் (தூத்துக்குடி), குப்பணம்பட்டி (மதுரை), பெரியபட்டி (மதுரை), ஆனைமடுவு அணை (சேலம்), சிவலோகம் சித்தார் (கன்னியாகுமரி), சுருளக்கோடு (கன்னியாகுமரி), கடம்பூர் (தூத்துக்குடி) தலா 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

கோவிலங்குளம் (விருதுநகர்), அருப்புக்கோட்டை KVK AWS (விருதுநகர்), திருமங்கலம் (மதுரை), வம்பன் KVK AWS (புதுக்கோட்டை), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), கல்லிக்குடி (மதுரை), கூடலூர் பஜார் (நீலகிரி), மலையூர் (புதுக்கோட்டை), துறையூர் (திருச்சிராப்பள்ளி).நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), சிட்டம்பட்டி (மதுரை), களியல் (கன்னியாகுமரி), அரிமளம் (புதுக்கோட்டை), திருமானூர் (அரியலூர்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), செருமுள்ளி (நீலகிரி).

ஹாரிசன்ஸ் மலையாளம் லிமிடெட்(நீலகிரி), மணமேல்குடி (புதுக்கோட்டை), குளித்தலை (கரூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), ஓசூர் AWS (கிருஷ்ணகிரி), நன்னிலம் (திருவாரூர்), திண்டுக்கல் (திண்டுக்கல்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), சிறுகமணி KVK AWS (திருச்சிராப்பள்ளி) தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மதுரை நகரம் (மதுரை), மதுரை வடக்கு (மதுரை), புலிவலம் (திருச்சிராப்பள்ளி), சிற்றாறு-I (கன்னியாகுமரி), தல்லி (கிருஷ்ணகிரி), தல்லாகுளம் (மதுரை), மேலூர் (மதுரை), பொன்னையார் அணை (திருச்சிராப்பள்ளி), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), வத்தலை அணைக்கட்டு (திருச்சிராப்பள்ளி), நடுவட்டம் (நீலகிரி), வீரபாண்டி (தேனி), ஓசூர் (கிருஷ்ணகிரி), மணப்பாறை (திருச்சிராப்பள்ளி), கிருஷ்ணராயபுரம் (கரூர்), கோத்தகிரி (நீலகிரி), தக்கலை (கன்னியாகுமரி).

பஞ்சப்பட்டி (கரூர்), எலந்தகுட்டை மேடு (ஈரோடு), கேத்தி (நீலகிரி), கலவை பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை), BDO சூளகிரி (கிருஷ்ணகிரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), கவுந்தப்பாடி (ஈரோடு), எச்சன்விடுதி (தஞ்சாவூர்), சின்னார் அணை (கிருஷ்ணகிரி), மேல் பவானி (நீலகிரி), மதுரை விமானநிலையம் (மதுரை), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), வைப்பாறு (தூத்துக்குடி), பார்வூட் (நீலகிரி), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), குடிமியான்மலை (புதுக்கோட்டை), துவாக்குடி IMTI (திருச்சிராப்பள்ளி) தலா 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பா, அறிகுறிகள் என்னென்ன? - பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை! - Kerala West Nile Fever

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.