ETV Bharat / state

தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் சுதீஷின் மனைவியிடம் ரூ.43 கோடி மோசடி.. நடந்தது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 22, 2024, 2:03 PM IST

Updated : Feb 22, 2024, 2:16 PM IST

DMDK LK Sudhish wife: தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் எல்கே சுதீஷின் மனைவி பூர்ண ஜோதியிடம், வீடு கட்டி தருவதாக கூறி 43 கோடி ரூபாய் மோசடி செய்த தனியார் கட்டுமான நிறுவனத்தினர் இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

எல்கே சுதீஷின் மனைவியிடம் ரூ.43 கோடி மோசடி செய்த கட்டுமான நிறுவனத்தினர் கைது
எல்கே சுதீஷின் மனைவியிடம் ரூ.43 கோடி மோசடி செய்த கட்டுமான நிறுவனத்தினர் கைது

சென்னை: தேமுதிக மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் எல்கே சுதீஷின் மனைவி பூர்ண ஜோதியிடம் வீடு கட்டி தருவதாக கூறி 43 கோடி ரூபாய் மோசடி செய்ததாக இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனரும், தேமுதிக துணைப் பொதுச்செயலாளருமான சுதீஷின் மனைவி பூர்ண ஜோதி. இவர் தனியார் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வரும் சந்தோஷ் சர்மா என்பவரிடம் சென்னை மாதவரத்தில் கட்டிய 250 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில், 78 வீடுகளை வாங்குவதற்காக பல கோடி ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் போட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனியார் கட்டுமான நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி முடித்தவுடன் அவர்கள், பூர்ண ஜோதியிடம் போட்ட ஒப்பந்தத்தின் படி வீடுகளை ஒதுக்காமல் சுமார் 48 வீடுகளை வேறு ஒருவருக்கு விற்று மோசடி செய்ததாக சொல்லப்படுகிறது. இதனை அறிந்த பூரண ஜோதி இது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதில் தனக்கு தனியார் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட வேண்டிய 48 வீடுகளை வேறொருக்கு விற்பனை செய்து சுமார் 43 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் புகார் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தனியார் கட்டுமான நிறுவனம் மோசடி செய்தது உறுதியானது.

இதனைத் தொடர்ந்து தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா மற்றும் அவரின் உதவியாளர் சாகர் ஆகிய இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேமுதிக மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் எல்கே சுதீஷின் மனைவி பூர்ண ஜோதியிடம் வீடு கட்டி தருவதாக கூறி 43 கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ரூ.27 கோடி மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல்!

Last Updated : Feb 22, 2024, 2:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.