ETV Bharat / state

இளையராஜாவின் மகள் பவதாரிணி மறைவு: அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் இரங்கல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 26, 2024, 9:47 AM IST

Ilayaraja Daughter Bhavatharini: பிரபல பின்னணி பாடகியும், இளையராஜாவின் மகளுமான பவதாரிணி நேற்று மாலை காலமானார். அவரது மறைவிற்கு திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

இளையராஜாவின் மகள் பவதாரிணி மறைவு
ilayaraja daughter Bhavatharini death latest update

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி(47) கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அண்மையில் இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை 5.20 மணிக்கு பவதாரிணி சிகிச்சை பலனின்றி காலமானதாக தகவல் வெளியானது. இந்த செய்தி, பவதாரிணியின் ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்து, சோகத்தில் மூழ்கடித்தது.

பவதாரிணி முதன்முதலில் ராசய்யா படத்தில், மஸ்தானா.. மஸ்தானா... என்ற பாடல் மூலம் அறிமுகமானவர். இவரது குடும்பமே இசைக்குடும்பம் என்பதால், தந்தை இளையராஜா மற்றும் சகோதரர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா இசையில் அதிக அளவிலான பாடல்களைப் பாடியுள்ளார். பாரதி படத்தில் பாடிய 'மயில்போல பொண்ணு ஒன்னு' பாடலுக்காக சிறந்த பெண் பின்னணி பாடகி என்ற தேசிய விருதைப் பெற்றவர்.

அதனைத் தொடர்ந்து, நடிகை ரேவதி இயக்கத்தில் வெளியான 'மித்ர் மை பிரண்ட்' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அவதாரமெடுத்தார். மேலும் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ளார். தனக்கென தனித்தன்மையுடனான குரலில், மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருந்தவர் பவதாரிணி.

தற்போது பவதாரிணியின் மறைவும் திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் உள்ள பவதாரிணியின் உடல் இன்று மாலை சென்னை கொண்டு வரப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: பிரபல பின்னணி பாடகியும், இசைஞானியின் அன்பு மகளுமான பவதாரிணியின் அகால மரணத்தால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

  • "பிரபல பின்னணிப் பாடகியும் இசைஞானியின் அன்பு மகளுமான பவதாரிணி அவர்களின் அகால மரணத்தால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    தனது பாசமகளை இழந்து துடிக்கும் @ilaiyaraaja அவர்களுக்கும், பவதாரணி அவர்களின் சகோதரர்கள் @thisisysr, கார்த்திக் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும்… pic.twitter.com/0xHSgbmsJ9

    — CMOTamilNadu (@CMOTamilnadu) January 25, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்: தனது இனிமையான குரல் வளத்தால் பல இசை ரசிகர்களை கவர்ந்து, தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்று, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அவரின் இழப்பு இசைத்துறைக்கு பேரிழப்பாகும்.

  • இசையமைப்பாளர் திரு.இளையராஜா அவர்கள் மகளும்,பிரபல பின்னணி பாடகியுமான பவதாரணி அவர்கள் உடல் நலக்குறைவால் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மன வேதனைை அடைந்தேன்.

    தனது இனிமையான குரல் வளத்தால் பல இசை ரசிகர்களை கவர்ந்து தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்று இசை ரசிகர்கள் மனதில் நீங்கா… pic.twitter.com/FsA1qPyVE9

    — Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) January 25, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: தனித்தன்மையுடன் கூடிய குரலால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்த பவதாரிணியின் மரணம், தமிழ் இசை உலகிற்கு பேரிழப்பு

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்: இசைஞானி இளையராஜா மகளும், திரைப்பட பின்னணி பாடகியுமான பவதாரிணி மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

திமுக எம்.பி கனிமொழி: இசைக் கலைஞர் பவதாரிணி மறைவு செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. பின்னணி பாடகராக தனித்துவமிக்க பாடல்களைத் தந்த அவரது மறைவு தமிழ் திரைத்துறைக்குப் பேரிழப்பாகும்.

  • இசைக் கலைஞர் திருமிகு. பவதாரணி அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. பின்னணி பாடகராக தனித்துவமிக்க பாடல்களைத் தந்த அவரது மறைவு தமிழ் திரைத்துறைக்குப் பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். pic.twitter.com/vNzE02bpQ9

    — Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) January 25, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்: சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினை இளம் வயதிலேயே பெற்ற சிறப்புக்குரியவர் பவதாரிணி. வித்தியாசமான குரல் வளத்தைக் கொண்டுள்ள அவர், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல பாடல்களை பாடி ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட பெருமைக்குரியவர். இவரது இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: தனது தனிச் சிறப்பான குரலால், இதயத்தை நெகிழச் செய்யும் பல பாடல்களைப் பாடியவர் பவதாரிணி. இளம் வயதிலேயே தேசிய விருது வென்ற அவர், இசையுலகில் பல சாதனைகள் படைப்பார் என்று அனைவரும் விரும்பியிருந்த போது, எதிர்பாராத மறைவு சற்றும் ஏற்க முடியாததாக இருக்கிறது.

  • சிறந்த பின்னணிப் பாடகியும், இசையமைப்பாளரும், இசைஞானி இளையராஜா அவர்களது புதல்வியுமான பவதாரணி அவர்கள், உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி, மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

    தனது தனிச் சிறப்பான குரலால், இதயத்தை நெகிழச் செய்யும் பல பாடல்களைப் பாடியவர் பவதாரணி. இளம்… pic.twitter.com/S2wf6PO1Lg

    — K.Annamalai (@annamalai_k) January 25, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: மனம் பதைக்கிறது. அருமைச் சகோதரர் இளையராஜாவைத் தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் கைகளை மானசீகமாகப் பற்றிக்கொள்கிறேன். பவதாரிணியின் மறைவு பொறுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒன்று.

இயக்குநர் பாரதிராஜா: என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன். மகள் பவதாரிணியின் மறைவு, எங்கள் குடும்பத்தினருக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

நடிகர் சிம்பு: அப்பாவித்தனத்திற்காகவும், அன்பிற்காகவும் மக்கள் இதயத்தில் என்றும் வாழும் குரல். ஒரு தூய ஆன்மாவாக இருந்தார், இவ்வளவு சீக்கிரம் சென்றுவிட்டார்.

பாடகி சின்மயி: எனக்கு தெரிந்த நல்ல மனிதர்களில் ஒருவர் பவதாரிணி இளையராஜா. பாதுகாப்பான பயணம், அன்பான அழகான பெண். அவரது குடும்பத்திற்கு வலிமை கிடைக்க பிரார்த்திக்கிறேன்.

நடிகர் சூரி: தேன் குரலில் பாடும் சகோதரி பவதாரிணியின் மறைவு பேரதிர்ச்சி. எந்த தகப்பனுக்கும் தாங்க முடியாத துயரம். என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்: பவதாரிணியின் திடீர் மறைவு மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளித்துள்ளது.

நடிகர் பிரசன்னா: பவதாரிணியின் மறைவு குறித்து அறிந்ததும் மிகவும் வேதனையடைந்தேன். அவர் நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்.

நடிகை சோனியா அகர்வால்: பவதாரிணியின் திடீர் மறைவு குறித்து கேள்விப்பட்டு மிகுந்த வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன். எனது கேரியரில் எனக்கு பிடித்த மிக முக்கியமான பாடல்களில் ஒன்றை பாடியதற்கு நன்றி என பதிவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: 75வது குடியரசு தினம்: அசோக சின்னத்தை பர்னிங் வுட் ஆர்ட் மூலம் தத்ரூபமாக வரைந்து அசத்திய இளைஞர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.