ETV Bharat / state

"பாமகவின் தேர்தல் வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது" - சௌமியா அன்புமணி! - Sowmiya Anbumani

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 31, 2024, 4:36 PM IST

PMK Dharmapuri Lok Sabha candidate Sowmiya Anbumani: தருமபுரி தொகுதியில் வெற்றி உறுதியாகிவிட்டது. எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறோம் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என தருமபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.

Sowmiya Anbumani
Sowmiya Anbumani

"பாமகவின் தேர்தல் வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது" - சௌமியா அன்புமணி!

தருமபுரி: தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) தருமபுரி நாடாளுமன்ற பாமக தேர்தல் அலுவலகத்தைத் தனது பேரன் பேத்திகளுடன் சேர்ந்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வின்போது, பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், பாமக தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சௌமியா அன்புமணி பேசுகையில்,

"தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த நான்கு நாட்களாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம். இதுவரை மேட்டூர், அரூர், பென்னாகரம் மற்றும் தருமபுரி உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு உள்ளோம்.

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் முதல் பெண் வேட்பாளர் நான்தான் நினைக்கும் போது பெருமையாக உள்ளது. என்னைத் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தால் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, காவிரி உபரிநீர் திட்டம் உள்ளிட்ட நல்ல திட்டங்களைக் கொண்டு வருவேன்.

தருமபுரி மாவட்டத்தில் வெயில் கடுமையாக இருந்தாலும், மக்கள் என்னை சிரித்த முகத்தோடு வரவேற்கிறார்கள் இதனைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. மூன்றாவது முறையாகப் பாரத பிரதமராக மோடி வருவார். தருமபுரி மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சினை அதிகம் உள்ளது.

அதனைக் கண்டிப்பாக தீர்க்க முயற்சிப்பேன். குறிப்பாகத் தருமபுரி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள நீர்ப்பாசன திட்டங்களான காவிரி உபரி நீர் திட்டம், எண்ணேகோல் புதூர் தும்பலஹள்ளி திட்டம் , வாணியாறு திட்டம், மற்றும் காவிரி-தருமபுரி உபரி நீர் திட்டம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட திட்டங்கள் உள்ளான.

இதற்கான நிதிகள் இன்னும் ஒதுக்கிடச் செய்யப்படவில்லை. ஒரு சில திட்டங்களுக்கு எல்லாம் 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணி மேற்கொண்டாலே போதுமானது. அந்த இடம் பசுமையானதாக இருக்கும். இது போன்ற திட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம்.

நிலுவையில் உள்ள நீர் பாசனத் திட்டங்களை மத்திய அரசும் நிறைவேற்றலாம், மாநில அரசும் நிறைவேற்றலாம் தெரிவித்தார்.தருமபுரி மொரப்பூர் ரயில் திட்டத்திற்காக முன்னாள் நடுவன் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் 19 முறை ரயில்வே அமைச்சரைப் பார்த்து முதற்கட்டமாகத் திட்டத்திற்கு ஒப்புதல் பெற்றது பாராட்டுக்குரியது. பிரதமர் அவர்களுடைய வாக்குறுதிகளும், பாமகவின் தேர்தல் வாக்குறுதிகளும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி தொகுதியில் வெற்றி உறுதியாகிவிட்டது. எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறோம் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'பாஜகவில் உள்ள ரவுடிகளின் பட்டியல் ரெடி! உச்சக்கட்ட பயத்தில் மோடி' - மு.க.ஸ்டாலின் - MK Stalin

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.