ETV Bharat / state

“இந்தியாவையும் சீனாவையும் ஒப்பிட முடியாது” - நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 16, 2024, 6:50 PM IST

Updated : Mar 16, 2024, 7:08 PM IST

Nirmala Sitharaman about India's development: உலக நாடுகள் ஆச்சரியப்படும் வகையில், டிஜிட்டல் பொருளாதாரத்தில் மிக அதிகமான வளர்ச்சியடைந்திருப்பது இந்தியாதான் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

டிஜிட்டல் பொருளாதாரத்தில் இந்தியாவின் வளர்ச்சியைப் பார்த்து உலக நாடுகள் ஆச்சரியப்படுகிறது
டிஜிட்டல் பொருளாதாரத்தில் இந்தியாவின் வளர்ச்சியைப் பார்த்து உலக நாடுகள் ஆச்சரியப்படுகிறது

டிஜிட்டல் பொருளாதாரத்தில் இந்தியாவின் வளர்ச்சியைப் பார்த்து உலக நாடுகள் ஆச்சரியப்படுகிறது

திருச்சி: சத்திரம் பகுதியில் உள்ள இந்திரா காந்தி மகளிர் கல்லூரியில், மகாத்மா காந்தி சிலை திறப்பு விழா நடந்தது. சிலையைத் திறந்து வைத்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது, "உலகத்தில் எங்கு சென்றாலும், தேசியம் தான் நம்மை முன்னெடுத்துச் செல்கிறது. இன்று, இந்தியாவின் வளர்ச்சியைப் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சியால், டிஜிட்டல் பொருளாதாரத்தில் அதிகமான வளர்ச்சியடைந்திருப்பது இந்தியா தான்.

நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும், அந்த அனுபவம் கிடைக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். டிஜிட்டல் தொழில்நுட்பம், பணப் பரிமாற்றத்துக்கு மட்டுமின்றி, கரோனா காலகட்டத்தில், மருத்துவத் துறையில் பெரிதும் பயன்படுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரிகளில் அந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில், நாட்டின் முன்னேற்றத்துக்கான எத்தனையோ திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில் பலதரப்பட்ட பாகுபாடுகள் இருந்தாலும், அனைத்து தரப்பிலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக ‘டிஜிட்டல் பப்ளிக் இன்ப்ராஸ்ட்ரக்சர்’ என்ற தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டது. நல்ல முன்னேற்றமடைந்த நாடுகளைப்போல், இந்தியாவும் 2047-க்குள் அந்த நிலையை அடைய முடியும். தற்போது, அந்த நம்பிக்கை வருவதற்கு காரணம், கடந்த 10 ஆண்டுகளில் பல உதாரணங்களை எடுத்துச் சொல்லலாம்.

கடந்த 70 ஆண்டுகளாக, சிறு சிறு துளிகளாக நாடு முன்னேற்றம் அடைந்ததை மாற்றி, மிக வேகமாக நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களையும் முன்னேற்றமடையச் செய்ய வேண்டும் என்று திட்டங்களை பிரதமர் செயல்படுத்தி உள்ளார். நாட்டின் அடித்தட்டில் உள்ள மனிதனுக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கம், ‘டிஜிட்டல் பப்ளிக் இன்ப்ராஸ்ட்ரக்சர்’ வாயிலாக நிறைவேறி உள்ளது. முன்னேற்றத்தில் இந்தியாவையும், சீனாவையும் ஒப்பிட முடியாது.

சீனாவில் ஜனநாயகம் என்பதே இல்லை. ஆனால், இந்தியாவில் சுதந்திரம், ஜனநாயகம் உள்ளிட்டவை மதிப்பு மிகுந்ததாக உள்ளது. பொருளாதாரத்தில், இந்தியா பத்தாவது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஐந்தாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறுவோம், மூன்றிலிருந்து நல்ல நிலைக்கு முன்னேறுவோம். அதற்கு அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும்" எனப் பேசினார்.

இதையும் படிங்க: "பாஜக கொண்டு வந்த பல பாதகமான சட்டங்களை இந்தியா கூட்டணி திருத்தும்" - திருச்சி எம்பி சிவா!

Last Updated : Mar 16, 2024, 7:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.