ETV Bharat / state

பேனா கேமிரா மூலம் பெண்ணின் அந்தரங்க வீடியோ எடுத்து விபரீதம்! மருத்துவ மாணவர் சிக்கியது எப்படி?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2024, 6:53 PM IST

Medical Student Arrest: சென்னையில் தனது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் பெண்ணின் படுக்கை அறையில் பேனா கேமரா பொருத்தி ஆபாச வீடியோ எடுத்த மருத்துவ மாணவரை போலீசார் கைது செய்தனர்.

Medical student arrested for making obscene video with pen camera in woman bedroom
பெண் படுக்கை அறையில் பேனா கேமரா பொருத்தி ஆபாச வீடியோ எடுத்த மருத்துவ மாணவர் கைது

சென்னை: சென்னையில் தனது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் பெண்ணின் அறையில் பேனா கேமரா பொருத்தி ஆபாச வீடியோ எடுத்த மருத்துவ மாணவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னையில் கடந்த 10 வருடங்களாக ஒரு பெண் அடுக்குமாடி குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், அந்த பெண்ணின் படுக்கை அறையில் புதிதாக பேனா ஒன்று வித்தியாசமாக இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அவர், அந்த பேனாவை எடுத்து பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவர், அந்த பேனாவில் கேமரா பொருத்தப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும், இது குறித்து அவரது கணவரிடமும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அதன் அடிப்படையில் பேனாவில் உள்ள கேமராவை பரிசோதனை செய்தபோது, அவரது மனைவியின் உடைமாற்று உள்ளிட்ட வீடியோக்கள் பதிவாகி இருந்ததைக் கண்டு குடும்பத்துடன் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர் அலிகானின் மேல்முறையீடு மனுவிற்கு உயர்நீதிமன்றம் மறுப்பு!

பின்னர் அந்த கேமரா பொருத்தப்பட்ட பேனாவைக் கொண்டு, ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த விசாரணையில், வீட்டில் வைக்கப்பட்டிருந்த கேமரா பொருத்திய அந்த பேனாவை அவர்கள் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் அப்துல் சமத் என்பவரின் மகன் இப்ராஹிம் என்பவர் வைத்தது என தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் இப்ராஹிமை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில், 36 வயதான இப்ராஹிம் சென்னை அருகே உள்ள ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் எம்.டி.எஸ் இறுதி ஆண்டு படித்து வருவது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: திருப்பத்தூரில் பாஜக கொடிகம்பம் விழுந்து ஒருவர் படுகாயம்… அண்ணாமலை நடைபயணத்தின் போது விபரீதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.