ETV Bharat / state

“வழக்கு நிலுவையில் இருந்தால் பாஸ்போர்ட் கிடையாது”.. சென்னை உயர் நீதிமன்றம்! - Passport Rules

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 14, 2024, 3:13 PM IST

Criminal Case: குற்ற வழக்கு நிலுவையில் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் பாஸ்போர்ட் பெற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் புகைப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் புகைப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த தமிழரசன் என்பவர், பாஸ்போர்ட் கோரி, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வன்கொடுமை தடைச் சட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த தமிழரசன், தனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், "வழக்கு நிலுவையில் இருக்கும் போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு செல்ல அனுமதித்தால், அது குற்ற வழக்கின் விசாரணையைப் பாதிக்கும்.

பாஸ்போர்ட் சட்டத்தில், குற்ற வழக்கு நிலுவையில் இருந்தால் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை நிராகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் குற்ற வழக்கு நிலுவையில் இருந்தால், சம்பந்தப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்த வழக்கை எதிர்கொண்டு, இறுதி முடிவுக்கு பிறகே வெளிநாடு செல்ல முடியும். வழக்கு நிலுவையில் உள்ள போது பாஸ்போர்ட் பெற முடியாது. அந்த முயற்சியை பரிசீலிக்க முடியாது" எனக் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: 'திறந்தவெளியில் கட்டுமானப் பணிகள் கூடாது' - வெயில் காரணமாக அதிரடி உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.