ETV Bharat / state

நாளை பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் மனுத் தாக்கல்! - Nomination files

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 24, 2024, 8:00 PM IST

DMK AIADMK BJP Candidates nomination: திமுக, அதிமுக மற்றும் பாஜக நாடாளுமன்ற வேட்பாளர்கள் நாளை வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.

aiadmk-dmk-bjp-parliament-candidates-will-file-nomination-at-25-march-2024
அதிமுக, திமுக மற்றும் பாஜக நாடாளுமன்ற வேட்பாளர்கள் நாளை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர்..

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் நாளை (மார்ச் 25) வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் இதுவரையில் சுயேட்சைகள் உட்பட 78 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

புதுச்சேரி தொகுதியில் சுயேட்சையாக ஒருவர் மட்டும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அருண் நேரு, சுயேட்சையாக வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நடிகர் மன்சூர் அலிகான் சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

தமிழ்நாடு, புதுச்சேரியில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. மார்ச் 27ஆம் தேதி மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம். அதனைத் தொடர்ந்து, 28ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடத்தப்படும். அதன் பின்னர், 30ஆம் தேதி மாலை 3 மணி வரையில் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறலாம். அதன் பின்னர், இறுதியாக போட்டியிடும் வேட்பாளர்களை உதவித் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அறிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக, அதிமுக, பாஜக கூட்டணிகளில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், நாம் தமிழர் கட்சியின் சார்பில் 40 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும், விளவங்கோடு இடைத்தேர்தலுக்கும் அ.தி.மு.க, பாஜக கூட்டணியில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

திமுக கூட்டணியில் திமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள், மார்ச்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, மதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியில் இன்னும் 2 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் உள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், எப்போதும் முகூர்த்த நாள், நேரம் பார்த்து தான் வேட்புமனுத் தாக்கல் செய்வார்கள். அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை, இன்று (மார்ச் 24) அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து நாளை (மார்ச் 25) அ.தி.மு.க வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.

அதேபோல், திமுக மற்றும் பாஜக வேட்பாளர்களும் நாளை (மார்ச் 25) வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளனர். நாளை வேட்பு மனுத் தாக்கல் செய்ய முடியாதவர்கள், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான 27ஆம் தேதி மனுத்தாக்கல் செய்வார்கள் என தெரிகிறது.

இதையும் படிங்க: திமுக தேர்தல் அறிக்கையில் மேகதாது அணை.. வாட்டாள் நாகராஜ் ஆர்ப்பாட்டம்! - Vatal Nagaraj Condemn DMK

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.