ETV Bharat / state

அஜித்குமாரை நலம் விசாரித்த விஜய்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 9, 2024, 7:21 PM IST

Vijay call to Ajithkumar: அஜித்குமாரை நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தில் தலைவருமான விஜய் தொலைபேசி வாயிலாக அழைத்து நலம் விசாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் அஜித்தை நலம் விசாரித்த விஜய்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் அஜித்தை நலம் விசாரித்த விஜய்

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் அஜித்குமார், இன்று காலை வீடு திரும்பினார். நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், சமூக வலைதளம் மூலமாக ரசிகரகள் பலரும் நடிகர் அஜித்குமார் விரைந்து குணமடைய வேண்டும் என பதிவிட்டிருந்தனர். மேலும் சிலர் தொலைபேசி வாயிலாகவும், நலம் விசாரித்துள்ளனர். இந்நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நேற்றைய தினமே அஜித் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: "குடிகார பொறுக்கிகள்" - மஞ்சும்மல் மட்டுமல்ல மலையாள கரையோரத்தையே விமர்சிக்கும் ஜெயமோகன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.