ETV Bharat / state

கோயில் திருவிழா விவகாரம்: காவலர்கள் முன்பே அடித்துக் கொண்ட இரு தரப்பினர்.. சங்கரன்கோவிலில் பரபரப்பு! - conflict between two parties

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 10, 2024, 10:28 PM IST

Conflict between two parties about temple festival: சங்கரன்கோவில் அருகே திருவிழா தொடர்பாக நடைபெற்ற சமாதான கூட்டத்தில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு தரப்பினர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரு தரப்பினர் மோதிக்கொண்ட புகைப்படம்
இரு தரப்பினர் மோதிக்கொண்ட புகைப்படம் (Credit: ETV Bharat Tamilnadu)

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது மேல வயலி கிராமம். இங்குள்ள இங்குள்ள சந்தன மாரியம்மன் கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இருதரப்பினரும் ஒரே தேதியில் திருவிழா நடத்த முயன்றதால் சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு (மே 09) வட்டாட்சியர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் முன்னிலையில் இருதரப்பினரும் சமாதான கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றவே அது கைகலப்பாக மாறியது. வட்டாட்சியர் மற்றும் உதவி ஆய்வாளர் முன்னிலையிலேயே இரு தரப்பினரும் மோதிக்கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோதலில் ஒருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விவகாரத்தில் காயம் அடைந்தவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கறிகஞர் தேன்மொழி உள்ளிட்ட மூன்று பேர் மீது நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி சமாதான கூட்டம் நடைபெற்றதன் காரணத்தினாலே இதுபோன்ற சம்பவம் நடைபெற்றதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க: அட்ஷய திரிதியை: தென்காசியில் நகைக்கடைகளில் நகை வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம் - Akshaya Tritiya

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.