ETV Bharat / sports

டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சு தேர்வு! - Gujarat Vs Bengaluru

author img

By ANI

Published : May 4, 2024, 7:21 PM IST

RCB vs GT: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

GT vs RCB புகைப்படம்
GT vs RCB புகைப்படம் (Credit: ANI)

பெங்களூரு: ஐபிஎல் தொடரின் 52வது லீக் ஆட்டம் இன்று (மே 4) பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

இரு அணிகளும் தனது 11வது போட்டியில் விளையாடுகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றால் 7வது இடத்திற்கு முன்னேறும், அதேநேரம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றால் அதே 7வது இடத்திற்கு முன்னேறும். மேலும், இரு அணிகளுமே இனி விளையாடக்கூடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே அஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெறும் என்பதால், இரு அணிகளும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நோக்குடன் களம் இறங்குவர்.

இந்த நிலையில், இப்போட்டிக்கான டாஸ் வீசப்பட்டது. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி, குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்கிறது.

இரு அணிகளுக்கான பிளேயிங் 11

குஜராத் டைட்டன்ஸ் அணி: விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), சுப்மான் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், டேவிட் மில்லர், ஷாருக் கான், ராகுல் தெவாடியா, ரஷித் கான், மானவ் சுதர், நூர் அகமது, மோகித் சர்மா, ஜோசுவா லிட்டில்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), வில் ஜாக்ஸ், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), கர்ண் சர்மா, ஸ்வப்னில் சிங், முகமது சிராஜ், யாஷ் தயாள், விஜய்குமார் வைஷாக்.

இதையும் படிங்க: நடிகை ஐஸ்வர்யா லட்சுமி உடன் காதலா? - ரகசியம் உடைத்த அர்ஜுன் தாஸ்! - Arjun Das About Aishwarya Lekshmi

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.