ETV Bharat / international

மாஸ்கோவில் நடந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்; ரஷ்யாவுக்கு இந்தியா துணை நிற்கும் என உறுதி - 2024 Crocus City Hall attack

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 23, 2024, 12:14 PM IST

Updated : Mar 23, 2024, 9:58 PM IST

PM Modi condemns 2024 Crocus City Hall attack in Russia: ரஷ்யாவில் மாஸ்கோவின் குரோகஸ் சிட்டி ஹாலில் நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்

PM Modi condemns 2024 Moscow Crocus City Hall attack in Russia
PM Modi condemns 2024 Moscow Crocus City Hall attack in Russia

டெல்லி: ரஷ்யாவின் மாஸ்கோ நகர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், 'மாஸ்கோவில் நடந்த கொடூரமான தீவிரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்திக்கிறோம். இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இந்தியா துணையாக நிற்கும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

மாஸ்கோவின் இசை விழா கூட்டரங்கு ஒன்றில் நேற்றிரவு நடந்த பயங்கவாதிகளால் நடத்தப்பட்ட பயங்கரமான துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவெடிப்பு தாக்குதலில், சுமார் 60 வரை கொல்லப்பட்டனர். இதுமட்டுமின்றி சுமார் 150 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.

மாஸ்கோவின் மிகப்பெரிய அரங்கமான 6000 பேர் வரை பங்கேற்ற இந்த இசைக் கச்சேரியில் நுழைந்த பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலினால், அரங்கு முழுவதும் தீக்கிரையாகியது. இதில், ஏராளமான பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இது தொடர்பாக ரஷ்யாவின் மாஸ்கோ பிராந்திய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நடைபெற்றுவரும் நிலையில், கூலிப்படைகளை ஏவி உக்ரைன் தான் இந்த தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இதற்கு உக்ரைன் நாட்டின் அதிபர் அலுவலகத்தின் தலைமை ஆலோசகர் மைக்கைலோ போடோலியாக் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதேபோல, சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'மாஸ்கோவிற்கு அருகிலுள்ள குரோகஸ் சிட்டி ஹாலில் நடந்த ஆயுதம் ஏந்திய பயங்கரவாதத் தாக்குதலுக்கு சவுதி அரேபியாவின் வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறோம்' எனக் குறிப்பிட்டுள்ளது.

கத்தார் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கும், பலரது உயிரிழப்பிற்கும் கத்தார் அரசு தனது கடும் கண்டனத்தையும் தெரிவிக்கிறது.

எந்த காரணங்களுக்காகவும், நோக்கத்திற்காகவும் மேற்கொள்ளப்படும் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை நிராகரிப்பதில் உறுதியான நிலைப்பாட்டை கத்தாரின் வெளியுறவு அமைச்சகம் மீண்டும் வலியுறுத்துகிறது. தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்திற்கும், அந்நாட்டு அரசுக்கும் கத்தார் அரசு மேலும், தனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணடையவும் பிரார்த்திக்கிறது' என அதில் குறிப்பிட்டுள்ளது.

நள்ளிரவில் மாஸ்கோவில் நடந்தப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. விளாடிமின் புதின் அதிபராக பொறுப்பேற்ற சில நாட்களுக்குளாக அந்நாட்டில் நடந்த இந்த பயங்கரமான தாக்குதல் சம்பவம் அந்நாட்டினரை துயரில் ஆழ்த்தியுள்ளது. மேலும், அதிபர் தேர்தலின் போது, அந்நாட்டில் வாக்காளர்கள் வாக்கு பெட்டியில் வண்ண மைப்பாட்டிலை ஊற்றி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்திய சம்பவமும் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மாஸ்கோவில் இசை விழாவில் தீவிரவாதிகள் தாக்குதல்..! 40 பேர் பலி..145 பேர் வரை படுகாயம் - ரஷ்யாவில் என்ன நடந்தது? - MOSCOW CONCERT HALL ATTACK

Last Updated :Mar 23, 2024, 9:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.