ETV Bharat / entertainment

ஜெயம் ரவியின் ஜீனி ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! - Jayam Ravi GENIE movie

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 24, 2024, 8:14 PM IST

GENIE movie: ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ஜீனி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி, தற்போது ஜீனி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் தொடக்க விழா, சென்னையில் கடந்த ஜூலையில் நடைபெற்றது. இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேசன் தயாரித்துள்ளார்.

இயக்குநர் அர்ஜுனன் ஜூனியர் இயக்கத்தில் தயாராகும் இந்த படத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி, தேவயானி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இது வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் 25வது படம் ஆகும். இப்படம், தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, வெளிநாடுகளில் நடைபெற்றது. ஆக்ஷன் கலந்த ஃபேண்டஸி படமாக இது உருவாகியுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இதில் ஜீனி லுக்கில் ஜெயம் ரவி இருக்கிறார். இப்படம் இந்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீப காலமாக ஜெயம் ரவியின் படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், இந்த படம் ஜெயம் ரவிக்கு வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஆர்ஜே விஜய் கதாநாயகனாக களமிறங்கும் ‘Wife’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! - RJ Vijay Wife Movie

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.