ETV Bharat / entertainment

எச்.வினோத் உதவி இயக்குநர் ஸ்ரீ வெற்றி இயக்கத்தில் தயாராகி வரும் நாற்கரப்போர்! - naarkarapor movie

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 5, 2024, 11:01 PM IST

Naarkarapor Movie: பிரபல இயக்குநர் எச்.வினோத்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ஸ்ரீ வெற்றி இயக்கத்தில் நாற்கரப்போர் என்ற திரைப்படத்தில் அஸ்வின், அபர்ணதி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

நாற்கரப்போர்
நாற்கரப்போர்

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான எச்.வினோத் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் V6 ஃபிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் வேலாயுதம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நாற்கரப்போர்’.

நாற்கரப்போர்
நாற்கரப்போர்

இயக்குநர் ஸ்ரீ வெற்றி இப்படத்தை இயக்கி வருகிறார். இவர் ஹெச்.வினோத், ராஜபாண்டி உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். இறுகப்பற்று படம் மூலம் கவனம் பெற்ற நடிகை அபர்ணதி கதாநாயகியாக நடிக்க, படத்தின் மைய கதாபாத்திரமாக சேத்துமான் படத்தில் நடித்த அஸ்வின் நடிக்கிறார்.

நாற்கரப்போர்
நாற்கரப்போர்

மேலும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் கபாலி, பரியேறும் பெருமாள் புகழ் லிங்கேஷ், வில்லனாக சுரேஷ் மேனன் ஆகியோர் நடிக்கின்றனர். பிரபல மலையாள இயக்குநர் மேஜர் ரவியின் மகன் அர்ஜுன் ரவி, மற்றும் ஞானசேகரன் ஆகியோர் இப்படத்தின் மூலம் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்கள். சந்தோஷ் நாராயணனிடம் பல படங்களில் இணைந்து பணியாற்றிய தினேஷ் ஆண்டனி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ரஞ்சித் சிகே என்பவர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

இப்படம் குறித்து ‘நாற்கரப்போர்’ குறித்து இயக்குநர் ஸ்ரீ வெற்றி கூறும்போது, “சதுரங்க விளையாட்டை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது. ஏழை - பணக்காரன், உயர் சாதி - தாழ்ந்த சாதி, அரசியல்வாதி - மக்கள் என இவர்களுக்கு இடையே காலங்காலமாக இருக்கும் பிரச்சனைகளையும், அனைத்தும் மக்களுக்கும் சம அளவில் கிடைக்கும் படியான தொலைநோக்கு பார்வை இல்லாத வரை இங்கு இவர்களுக்குள்ளான போர் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்ற அரசியலைப் பேசுகிறது.

அதிகாரம் என்பது செயல்பாடுகளை நெறி முறைப்படுத்துவதற்கே அன்றி தனிமனித தாக்குதலாக மாறக்கூடாது என்பதையும் சதுரங்க விளையாட்டின் பின்னணியில் இந்த படம் பேசுகிறது. தூய்மைப்பணி செய்யும் சமுதாயத்திலிருந்து வந்த ஒருவன் எப்படி ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆகிறான், அதற்காக அவன் சந்திக்கும் அரசியல் ரீதியான, சாதி ரீதியான, பிரச்சனைகள் என்ன என்பதைச் சொல்லும் அழகான ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக இந்த ‘நாற்கரப்போர்’ உருவாகி உள்ளது” எனப் பேசினார்.

சென்னை மற்றும் திண்டுக்கல் ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 40 நாட்கள் நடைபெற்றுள்ளது. பட ரிலீஸுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

இதையும் படிங்க: ராமாயணம் படத்திற்காக ஹான்ஸ் ஸிம்மருடன் இணைந்து பணிபுரியும் ஏ.ஆர்.ரஹ்மான்? - Arrahman Hans Zimmer

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.