ETV Bharat / entertainment

இந்த வாரம் தியேட்டரில் வெளியாகப் போகும் படங்கள் லிஸ்ட் இதோ..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 22, 2024, 6:32 PM IST

Theatrical Release: இளையராஜா இசையில் உருவாகியுள்ள நினைவெல்லாம் நீயடா, வைபவ் நடிப்பில் ரணம், சதீஷ் நடிப்பில் வித்தைக்காரன் உள்ளிட்ட 8 படங்கள் நாளை திரையரங்கங்களில் வெளியாகவுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தொடர்ச்சியாக படங்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் பொங்கல் பண்டிகைக்கு சிவகார்த்திகேயனின் நடித்த அயலான், தனுஷ் நடித்த கேப்டன் மில்லர், விஜய் சேதுபதி நடிப்பில் மெரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்கள் வெளியானது.

அதனைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்த லால்சலாம், ஜெயம் ரவி நடித்த சைரன் படம் உள்ளிட்ட திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்த வாரம் 8 படங்கள் வெளியாகிறது, இவை அனைத்துமே சிறிய பட்ஜெட் படங்கள். இதில் இளையராஜா இசையில் உருவாகியுள்ள நினைவெல்லாம் நீயடா, வைபவ் நடிப்பில் ரணம், சதீஷ் நடிப்பில் வித்தைக்காரன் உள்ளிட்ட 8 படங்கள் வெளியாகிறது, இது குறித்த சிறிய தொகுப்பை இதில் காண்போம்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ரணம்: அறிமுக இயக்குநர் ஷெரீஃப் இயக்கத்தில் வைபவ், தான்யா ஹோப், நந்திதா ஸ்வேதா, சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் 'ரணம் அறம் தவறேல்'. அரோல் கரோலி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலாஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மது நாகராஜ் தயாரித்திருக்கும் இந்தப் படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

வித்தைக்காரன்: ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் (White Carpet Films) சார்பில், K.விஜய் பாண்டி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கத்தில், நகைச்சுவை நடிகர் சதீஷ் நாயகனாக நடிக்கும் வித்தியாசமான ஹெய்ஸ்ட் திரைப்படம் “வித்தைக்காரன்”.

நாய் சேகர், காஞ்ஜூரிங் கண்ணப்பன் படங்களைத் தொடர்ந்து நடிகர் சதீஷ் கதை நாயகனாக நடித்துள்ளார். இதில் சதீஷுக்கு ஜோடியாக சிம்ரன் குப்தா நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்த்ராஜ், மதுசூதனன் ராவ், சுப்பிரமணிய சிவா, ஜான் விஜய், ஆஷிஃப் அலி, பாவெல், ஜப்பான் குமார், சாம்ஸ், சாமிநாதன், மாரிமுத்து உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படமும் நாளை வெளியாகிறது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

பைரி: டி.கே புரொடக்ஷன்ஸ் சார்பாக, வி.துரைராஜ் தயாரிப்பில், ஜான் கிளாடி இயக்கத்தில் சையது மஜீத், மேக்னா எலன் மற்றும் விஜி சேகர் ஆகியோர் நடிப்பில், உருவாகியுள்ள திரைப்படம் பைரி. புறா பந்தயத்தை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நாளை வெளியாக உள்ள இப்படத்தைச் சக்தி பிலிம்ஸ் பேக்டரி சக்திவேலன் வெளியிடுகிறார்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

நினைவெல்லாம் நீயடா: ஆதிராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'நினைவெல்லாம் நீயடா'. இப்படம் இளையராஜா இசை அமைத்துள்ள 1,417வது படம் ஆகும். இத்திரைப்படத்தின் பிரஜன், மனிஷா யாதவ், ரெட்டின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒருவருக்கு வரும் முதல் காதல் பற்றிய கதையாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படமும் நாளை வெளியாகிறது. இதனுடன் ஷபீர் நடித்துள்ள பர்த் மார்க், ஆபரேஷன் லைலா, பாம்பாட்டம், கிளாஸ்மேட்ஸ் உள்ளிட்ட படங்களும் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:காதலி தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த காதலன்.. தஞ்சையில் நிகழ்ந்த பகீர் சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.