ETV Bharat / entertainment

மஞ்சுமெல் பாய்ஸ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியீடு! ரிலீஸ் தேதி எப்போ? - Manjummel Boys OTT Release date

author img

By PTI

Published : Apr 21, 2024, 12:13 PM IST

வசூல் சாதனை படைத்த மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் விரைவில் வெளியாக உள்ளது.

Etv Bharat
Etv Bharat

டெல்லி : இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் வெளியாகி வசூல் சாதனை படைத்த மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் விரைவில் வெளியாக உள்ளது. கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் வசூலில் சக்கைப் போடு போட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள குணா குகையை பின்புலமாக கொண்டு வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ், கணபதி எஸ்.பொடுவால், லால் ஜூனியர், தீபக் பரம்போல், அபிராம் ராதாகிருஷ்ணன், அருண் குரியன், காலித் ரஹ்மான், சந்து சலீம்குமார், ஷெபின் பென்சன், மற்றும் விஷ்ணு ரெகு உள்ளிட்டோர் நடத்தி இருந்தனர்.

இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் உலக அளவில் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்தது. மேலும், டொவினோ தாமஸ் நடித்து வெளியான 2018 படத்திற்கு பிறகு மலையாள சினிமாவில் அதிக வசூல் குவித்த படம் என்ற சிறப்பை மஞ்சுமெல் பாய்ஸ் படம் பெற்றது.

இந்நிலையில், மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்நிலையில், படத்தின் ப்ரீமியர் காட்சிகளை வெளியிட்டு உள்ள டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனர் விரைவில் ஓடிடி தளத்தில் படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட உள்ளதாக அறிவித்து உள்ளது. அடுத்த மாதம் தொடக்கத்தில் மஞ்சுமெல் பாய்ஸ் ஓடிடியில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : 2025ஆம் ஆண்டு பிரேமலு-2 ரிலீஸ்! படக்குழு அறிவிப்பு! - Premalu 2

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.