ETV Bharat / entertainment

'தக் லைஃப்' படத்தின் புதிய அப்டேட்: விலகுகிறாரா முன்னணி நட்சத்திரம்.. ரசிகர்கள் கேள்வி? - Thug life movie update

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 13, 2024, 7:10 PM IST

Gautham karthik in Thug life: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 'தக் லைஃப்' படத்தின் சர்வதேச வெளியீடு குறித்து வெளியிட்ட அப்டேட்டில், நடிகர் கௌதம் கார்த்திக்கின் பெயர் குறிப்பிடாமல் இருந்தது அவர் படத்திலிருந்து விலகினாரா என்ற கேள்வி ரசிகர் மத்தியில் எழுந்துள்ளது.

Thug life movie posters
Thug life movie posters (Credits - RKFI International X Page)

சென்னை: தமிழ் சினிமாவில் தலைசிறந்த இயக்குநர்களுள் ஒருவர் மணிரத்னம். ஒரு இயக்குநராக தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளவர் இவர். கடைசியாக, இவரது இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் மூலம், தமிழ் திரையுலகின் நீண்ட நாள கனவை நினைவாக்கிய சாதனையும் படைத்தார்.

இந்நிலையில், தற்போது நடிகர் கமல்ஹாசனை வைத்து இயக்கி வரும் புதிய படம் 'தக் லைஃப்' (Thug Life). இது நடிகர் கமல்ஹாசனின் 234வது படமான இப்படத்தின் மூலம் சுமார் 37 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசனுடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் 'தக் லைஃப்' படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். முன்னதாக, இப்படத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா, துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி, நாசர் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கால்ஷீட் பிரச்சனை காரணமாக துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி இப்படத்திலிருந்து விலகிவிட்டதாகத் தகவல் வெளியாகின. இதனிடையே, துல்கர் சல்மானுக்குப் பதிலாக நடிகர் சிம்பு படத்தில் இணைந்துள்ளார். சமீபத்தில் படத்தில் சிம்புவின் கதாபாத்திரத்தைக் குறிப்பிடும் போஸ்டர் ஒன்றைப் படக்குழு தரப்பில் வெளியிடப்பட்டது.

இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனிடையே 'தக் லைஃப்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அண்மையில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகி, படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், 'தக் லைஃப்' படத்தின் சர்வதேச வெளியீட்டாளர்கள் குறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன் படி, ஏபி இன்டர்நேஷனல் (AP International) மற்றும் ஹோம் ஸ்கிரீன் என்டர்டெயின்மென்ட் (Home Screen Entertainment) படத்தின் சர்வதேச வெளியீட்டைக் கவனிக்கிறது.

இது குறித்து, ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தரப்பில் வெளியிட்டுள்ள X பதிவில் படத்தின் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, அதில் தக் லைஃப் படத்தில் நடிக்கும் நடிகர்கள், பணியாற்றுபவர்கள் உள்ளிட்டவர்களை டேங் செய்திருந்தனர். ஆனால், அதில் கௌதம் கார்த்திக் டேக் செய்யப்படாமல் இருப்பது ரசிகர் மத்தியில் அவர் படத்தில் இருந்து விலகி விட்டாரா என்ற கேள்வி எழும்பியுள்ளது.

இதையும் படிங்க: "2K கிட்ஸ்களுக்கு பிடித்த படமாக ஹரா இருக்கும்" - நடிகர் மோகன் நம்பிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.