ETV Bharat / entertainment

நடிகர் விஸ்வேஸ்வர ராவ் காலமானார்! - Actor Visveswara Rao passed away

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 2, 2024, 6:29 PM IST

Actor Visveswara Rao passed away: புற்றுநோயால் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விஸ்வேஸ்வர ராவ் (64) இன்று(ஏப்.2) காலமானார்.

Actor Visveswara Rao passed away
Actor Visveswara Rao passed away

சென்னை: புற்றுநோயால் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விஸ்வேஸ்வர ராவ் (64) இன்று(ஏப்.2) காலமானார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் புற்றுநோய்க்குச் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, எம்ஜிஆரின் நான் ஏன் பிறந்தேன், நீதிக்கு தலைவணங்கு படத்திலும், சிவாஜியின் எங்க மாமா உள்ளிட்ட 70 காலகட்டத்தில் வெளியான பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், பிற்காலத்தில் பல தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

மேலும், பிதாமகன் திரைப்படத்தில் லைலாவிற்கு அப்பாவாகவும், ஜீவா நடிப்பில் வெளியான ஈ திரைப்படத்தில் சேட் கதாபாத்திரத்திலும் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர். மேலும் மாமா மாப்பிள்ளை, தெய்வமகள் உள்ளிட்ட சன் டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: குக் வித் கோமாளி புகழ் நடிப்பில், நிஜப் புலியை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் மே 03ஆம் வெளியீடு! - Actor Pugazh Mr Zoo Keeper

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.