ETV Bharat / entertainment

Tenet-க்கு கிடைக்காத ஆஸ்கர் Oppenheimer-க்கு கிடைத்தது எப்படி? 3 முறை நோலனை புறந்தள்ளிய ஆஸ்கர்! - Christopher Nolan Movies List

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 11, 2024, 12:21 PM IST

Updated : Mar 23, 2024, 2:11 PM IST

Christopher Nolan: ஓபன்ஹெய்மர் படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை கிறிஸ்டோபர் நோலன் முதல் முறையாக பெற்றார்.

Etv Bharat
Etv Bharat

ஐதராபாத் : 96வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள டால்பி திரையரங்கில் கோலகலமாக நடைபெற்றது. இதில் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை முதல் முறையாக ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் ஓபன்ஹெய்மர் படத்திற்காக பெற்றார்.

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் 2008ஆம் ஆண்டு The Dark Knight, 2014ஆம் ஆண்டு Interstellar, 2010ஆம் ஆண்டு Inception, 2020 ஆண்டு Tenet, 2017ஆம் ஆண்டு Dunkirk உள்ளிட்ட படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே பயங்கர வரவேற்பையும் வசூல் ரீதியாக வெற்றிப் படங்களாகவும் அமைந்தது.

இருப்பினும் அவருக்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை. தற்போது ஓபென்ஹெய்மர் படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை கிறிஸ்டோபர் நோலன் பெற்று உள்ளார். The Zone of Interest படத்தை இயக்கிய ஜோனதன் கிளசரின், யோர்கோஸ் லாந்திமோசின் Poor Things, மார்ட்டின் ஸ்கோர்செஸியின் Killers of the Flower Moon, ஜஸ்டின் ட்ரைட்டின் Anatomy of a Fall ஆகிய இயக்குநர்களை பின்னுக்குத் தள்ளி கிறிஸ்டோபர் நோலன் முதல் முறையாக ஆஸ்கர் வென்று உள்ளார்.

இதற்கு முன் கிறிஸ்டோபர் நோலன் அகாடமி விருதுக்கு தேர்வானது இல்லையா என்றால் ஏறத்தாழ 3 முறை பல்வேறு பிரிவுகளில் தேர்வாகியும் அவருக்கு விருது கிடைக்கவில்லை.

கடந்த 2002 ஆம் ஆண்டு Memento படத்திற்காக சிறந்த ஒரிஜினல் திரைக்கதை பிரிவிலும், சிறந்த படம் மற்றும் ஒரிஜினல் திரைக்கதை பிரிவில் கடந்த 2010ஆம் ஆண்டு Inception படத்திற்காகவும், கடைசியாக சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநருக்காக 2018ஆம் ஆண்டு வெளியான Dunkirk படத்திற்காக என மூன்று முறை ஆஸ்கர் விருது தேர்வு பட்டியலில் கிறிஸ்டோபர் நோலன் இடம் பிடித்து இருந்தும் விருது கிடைக்கவில்லை.

இறுதியில், கடந்த ஆண்டு வெளியான ஓபன்ஹெய்மர் படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான விருதை கிறிஸ்டோபர் நோலன் பெற்று உள்ளார். அதேபோல், ஓபன்ஹெய்மர் படம் மொத்தம் 13 பிரிவுகளில் போட்டியிட்ட நிலையில், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த துணை நடிகர், சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு ஆகிய 7 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஆஸ்கர் விருதுகள் 2024; விருதுகளைக் குவித்த ஓபன்ஹெய்மர் திரைப்படம்..!

Last Updated : Mar 23, 2024, 2:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.