ETV Bharat / entertainment

2015 தமிழக அரசின் திரைப்பட விருது வாங்கிய பிரபலங்கள் கூறியது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 7, 2024, 1:39 PM IST

TN Govt Film Awards: 2015 ஆம் ஆண்டு வெளியாகி கவனத்தை ஈர்த்த படங்கள் மற்றும் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறதப்படம் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டப் பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது.

Tamil Nadu Government Film Awards
Tamil Nadu Government Film Awards

சென்னை: தமிழ்நாடு அரசின் 2015ஆம் ஆண்டிற்கான திரைப்பட விருதுகள் நேற்று(மார்ச் 07) வழங்கப்பட்டது. இதில் சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, இசை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த விருது பெற்றவர்கள், தங்களது அனுபவங்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.

பாடகர் கானா பாலா: "2015 ஆண்டு வெளியான வை ராஜா வை பாடலுக்காகச் சிறந்த பின்னணி பாடகர் விருது தமிழ்நாடு அரசு சார்பாக எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் குறிப்பாக செய்தித்துறை அமைச்சர் அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் நிறையப் பாடல்கள் பாடுவேன்,. நான் ஒரு சாதாரணமான கானா பாடகர் எனக்கு இந்த விருதை வழங்கி சிறப்பித்ததற்கு அனைவருக்கும்" நன்றி என்றார்.

இயக்குநர் மோகன் ராஜா: "தனி ஒருவன் திரைப்படத்திற்கு ஆறு மாநில விருதுகள் கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ்நாடு அரசிற்கு நன்றி. ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படம் அமைவதற்கு ஒரு மிகப்பெரிய காரணம் அவர்களுக்கும் விருது கிடைத்தது மகிழ்ச்சி. பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வந்த ஒரு திரைப்படம் இவ்வளவு பெரிய வெற்றியைக் கொடுத்தற்கு, ரசிகர்களுடைய ஆதரவால் தான் வெற்றியைப் பெற்றிருக்கிறது. என் வாழ்க்கையில் இது ஒரு சிறந்த மற்றும் முக்கியமான திரைப்படம்" என்று தெரிவித்தார்.

இசையமைப்பாளர் ஜிப்ரான்: "உத்தமவில்லன் என்னுடைய கேரியரில் முக்கியமான ஒரு திரைப்படம். இந்த பாடல் முடியும்பொழுது, இந்த பாடல் முக்கியமான ஒரு பதிவாக இருக்கும் எனக் கமல் தெரிவித்து இருந்தார். இதற்கான அங்கீகாரம் கிடைத்ததற்கு மகிழ்ச்சி. பாபநாசம் மற்றும் உத்தம வில்லன் திரைப்படத்திற்கு விருது கிடைத்துள்ளது" என்றார்.

தலைவாசல் விஜய்: "தமிழ்நாடு அரசின் மிக உயர்வான விருதான இந்த விருதைப் பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.சினிமா துறையில் பணியாற்றுபவர்களுக்கு விருது வழங்கி சிறப்பிப்பது வரவேற்கத்தக்கது"என்று பேசினார்.

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் 2015: சென்னை ராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ் பேரவை டி.என்.ராஜரத்தினம் கலை அரங்கில், தமிழ்நாடு அரசின் 2015ஆம் ஆண்டிற்கான திரைப்பட விருதுகள்வழங்கும் விழா நேற்று (மார்ச் 6) நடைபெற்றது.

இதில்,தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மேலும், சிறப்பு விருந்தினராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மயிலை வேலு ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.

இந்த விழாவில் மொத்தம் 39 விருதுகள் வழங்கப்பட்டன. சூர்யா தயாரித்த முதல் படமான '36 வயதினிலே' திரைப்படத்திற்கு சிறந்த நடிகை உள்ளிட்ட ஏழு விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் 'தனி ஒருவன்' படம் 6 விருதுகளை வென்றது. அதேபோல், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் வெளியான 'இறுதிச்சுற்று' படமும் 6 விருதுகளை வென்றது. இது தவிர சூர்யா தயாரிப்பில் வெளியான 'பசங்க 2' திரைப்படத்திற்கு நான்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க: தமிழ் சினிமாவின் மகளிர் தின ஸ்பெஷலாக 6 படங்கள் ரிலீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.