ETV Bharat / bharat

ராஜஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து.. மீட்பு பணிகள் தீவிரம்

author img

By PTI

Published : Mar 18, 2024, 9:07 AM IST

Updated : Mar 18, 2024, 1:12 PM IST

Sabarmati Agra Express derailed: ராஜஸ்தான் மாநிலம் சபர்மதியில் இருந்து ஆக்ரா நோக்கி சென்று கொண்டிருந்த சபர்மதி-ஆக்ரா அதிவிரைவு பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

Sabarmati Agra Express derailed
Sabarmati Agra Express derailed

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் அடுத்த சபர்மதி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து ஆக்ரா கண்டோன்மென்ட் ரயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த சபர்மதி-ஆக்ரா அதிவிரைவு பயணிகள் ரயில், அஜ்மீர் அருகே சரக்கு ரயில் மீது மோதி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. முதற்கட்ட தகவலின் படி சில பயணிகள் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சபர்மதி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து ஆக்ரா கண்டோன்மென்ட் ரயில் நிலையத்திற்கு வாரத்திற்கு 4 நாட்கள் இயக்கப்படும் இந்த ரயில், சபர்மதியில் இருந்து மாலை 4.55 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 7.15 மணிக்கு ஆக்ரா சென்றடைகிறது. அந்தவகையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை புறப்பட்ட இந்த ரயில், அஜ்மீர் அடுத்த மதார் ரயில் நிலையம் அருகே இன்று (திங்கள்கிழமை) நள்ளிரவு 1.04 மணிக்கு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், ரயிலின் எஞ்ஜின் உட்பட நான்கு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. மேலும், இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும், சிலர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில் வட மேற்கு ரயில்வே துறை உயரி அதிகாரி விபத்து குறித்து X சமூக வலைத்தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், "இன்று நள்ளிரவு 1 மணியளவில் அஜ்மீர் அருகே, சபர்மதி-ஆக்ரா அதிவிரைவு ரயில் (12548) ரயிலின் நான்கு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழப்புகளோ, படுகாயம் அடைந்தவர்களோ யாரும் இல்லை. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும், விபத்து நடைபெற்ற பகுதியில் தண்டவாளம் சீரமைக்கப்பட்டு, இந்த ரயில் அனுப்பிவைக்கப்பட்டது. இந்த விபத்தின் காரணமாக பல்வேறு பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மற்ற ரயில்கள் ஒவ்வொன்றாக அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், இந்த விபத்து காரணமாக விபத்து காரணமாக 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக பயணிகள், ரத்து செய்யப்பட்ட ரயில்கள், மாற்றம் செய்யப்பட்ட ரயில் குறித்து அறிந்து கொள்ள உதவி எண்ணும் (0145-2429642) அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்து நடந்த குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்! குஜராத் பல்கலைக்கழகத்தில் என்ன நடந்தது?

Last Updated : Mar 18, 2024, 1:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.