ETV Bharat / bharat

செங்கடல் பிரச்சனை குறித்து பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பேச்சுவார்த்தை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 27, 2024, 2:18 PM IST

செங்கடல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

செங்கடல் பிரச்சனை குறித்து பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் நாட்டு அதிபர் மேக்ரோன் பேச்சுவார்த்தை
செங்கடல் பிரச்சனை குறித்து பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் நாட்டு அதிபர் மேக்ரான் பேச்சுவார்த்தை

புது டெல்லி: டெல்லியில் நேற்று நடைபெற்ற 75வது குடியரசு தின விழாவில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். குடியரசு தின நிகழ்ச்சிக்கு பிறகு இம்மானுவேல் மேக்ரானுடன் செங்கடலில் ஏற்பட்ட பதட்டம் மற்றும் அதற்கான தீர்வு குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

ஏமனின் ஹூதி போராளிகள் இஸ்ரேல் ராணுவ தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த நவம்பர் மாதம் முதல் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். மோடி மற்றும் மேக்ரான் சர்வதேச கடல் சட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும், செங்கடலில் சுதந்திரமாக செல்வதின் முக்கியத்துவம் குறித்தும் விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மோடி மற்றும் மேக்ரான் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

தற்போது இந்த மோதலில் பொதுமக்கள் ஏற்பட்டுள்ள இழப்பை கண்டித்து, காசா பிராந்தியத்தின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர் நிறுத்தம் உட்பட நிலைமைகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். பணையக் கைதிகளை விடுவிக்க காசா மற்றும் இஸ்ரேல் என இரு நாட்டு தலைவர்களும் விருப்பம் தெரிவித்தனர்.

மேலும் மோடி மற்றும் மேக்ரான் ஆகியோர் உக்ரைன் போர் குறித்தும், அங்கு போரால் மனித உயிரிழப்புகள் குறித்தும் வருத்தம் தெரிவித்தனர். அனைத்து வகையான பயங்கரவாத வெளிப்பாடுகளையும் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிப்பதை இரு நாட்டு தலைவர்களும் உறுதி செய்தனர்.

அதோடு உலகளாவிய பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிரான பொதுவான போராட்டத்தில் ஒன்றிணைந்து செயல்பட உறுதிப்பாட்டை பகிர்ந்தனர். இந்தியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கு புகலிடம் வழங்கக் கூடாது என மோடியும், மேக்ரானும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ஆஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி 4 இந்தியர்கள் உயிரிழப்பு! என்ன நடந்தது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.