ETV Bharat / bharat

மோடி வேட்புமனு தாக்கல்! வாரணாசியில் மோடி ரோடு ஷோ - MODI FILE NOMINATION

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 14, 2024, 8:57 AM IST

Updated : May 14, 2024, 9:18 AM IST

MODI FILE NOMINATION: மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் பிரதமர் மோடி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

PM Narendra Modi Photo
பிரதமர் மோடி புகைப்படம் (Credits: IANS)

உத்தர பிரதேசம்: 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில், உத்தர பிரதேசம் வாரணாசி உள்ளிட்ட 13 தொகுதிகளுக்கு கடைசி கட்டமாக ஜூன் 1ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதன் மூன்றாவது நாளான ஜூன் 4-ல் நாடு முழுவதும் இந்த மக்களவைத் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் வெளியாக உள்ளன.

இந்தியாவில் அதிக மக்களவைத் தொகுதிகளை கொண்ட மாநிலமாக இருக்கும் உத்திர பிரதேசத்தில் 80 தொகுதிகள் இருக்கின்றன. ஆகையால், உ.பியில் 7 கட்டங்களிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் இன்றே (மே 14) கடைசி நாள்.

3ஆம் முறை களம் காணும் மோடி: வாரணாசி எம்.பியாக இரண்டாவது முறையாக தொடரும் மோடி, மூன்றாவது முறையாக வாரணாசி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் காண்கிறார். இந்நிலையில், இந்த மக்களவை தேர்தலையொட்டி, மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இதற்காகவே, ஒரு நாள் முன்னதாகவே வாரணாசிக்கு மோடி வருகை தந்துள்ளார். அவருக்கு, பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

6 கி.மீ ரோடு ஷோ: வாரணாசி வந்த மோடி, லங்கா பகுதியில் உள்ள மதன் மோகன் மாளவியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின்னர், தனது வாகனப் பேரணியை (PM Modi Road Show) ஆரம்பித்தார். வாரணாசியின் முக்கிய சாலையில் 6 கிலோ மீட்டர் வாகனப் பேரணியை நடத்தினார். அந்நிகழ்வில், உத்தர பிரதேசம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார்.

மோடிக்கு போட்டி யாரு?: பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் உத்தர பிரதேசம் காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் போட்டியிடுகிறார். பிரதமர் மோடியை எதிர்த்து அஜய் ராய் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சுமார் 4 லட்சத்து 79 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் மோடி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Live: 4வது கட்ட மக்களவை தேர்தல் நிறைவு: 63.04 சதவீத வாக்குகள் பதிவு! - Lok Sabha Election 4th Phase

Last Updated :May 14, 2024, 9:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.