ETV Bharat / bharat

அம்பேத்கர் பிறந்த நாளில் 'சங்கல்ப் பத்ரா' பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பிரதமர் மோடி - BJP MANIFESTO

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 14, 2024, 9:40 AM IST

Updated : Apr 15, 2024, 6:37 AM IST

BJP Manifesto 2024: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி, பாஜக தேர்தல் அறிக்கையை (சங்கல்ப் பத்ரா) பிரதமர் மோடி இன்று வெளியிட்டார்.

பாஜக தேர்தல் அறிக்கை சங்கல்ப் பத்ராவை பிரதமர் மோடி வெளியிட்டார்
PM Modi BJP Manifesto 2024

டெல்லி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையையொட்டி, பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கை மற்றும் செயல் திட்டங்களை (BJP Manifesto 2024 - Sankalp Patra) வெளியிட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டார்.

நாட்டில் மொத்தம் 7 கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 வரை நடக்க உள்ளது. பின்னர், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடக்க உள்ளது. இன்னும் தேர்தலுக்கு நான்கு நாட்களே உள்ள நிலையில், நாடும் முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்த நாளான (ambedkar birthday) இன்று டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் பாஜக தேர்தல் அறிக்கையை “சங்கல்ப் பத்ரா” பிரதமர் மோடி வெளியிட்டார். இவ்விழாவில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் உடனிருந்தனர்.

இது தொடர்பாக மோடி வெளியிட்ட பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

  • தமிழ் மொழியை கௌரவிக்கும் விதமாக திருவள்ளுவர் பண்பாட்டு மையம் அமைக்கப்படும்
  • 2036 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த நடவடிக்கை
  • 70 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பயனடைய ஏற்பாடு
  • அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் நீட்டிப்பு
  • 80% தள்ளுபடி விலையில் மக்கள் மருந்தகங்களில் மருந்துகள் கிடைக்க நடவடிக்கை
  • முத்ரா யோஜனா கடன் திட்டத்திற்கான உச்ச வரம்பு ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும் என்ப உள்ளிட்ட பல முக்கிய வாக்குறுதிகள் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க: "காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் சித்தாந்தத்தை பிரதிபலிக்கிறது" - பிரதமர் மோடி! - Lok Sabha Election 2024

Last Updated :Apr 15, 2024, 6:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.