ETV Bharat / bharat

தமிழக கும்கிகளின் உதவியை நாடிய ஒடிசா அரசு.. காரணம் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 23, 2024, 11:27 AM IST

Updated : Jan 23, 2024, 12:13 PM IST

Odisha requesting kumki elephant: ஒடிசா மாநிலத்தில் காட்டு யானைகளால் ஏற்படும் இழப்புகளைக் கட்டுப்படுத்த, அம்மாநில வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், 4 கும்கி யானைகளை அனுப்பி உதவி புரிய வேண்டும் என தமிழக வனத்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

ஒடிசாவில்  யானகளை கட்டுப்படுத்த தமிழக கும்கி யானைகள்
ஒடிசாவில் யானகளை கட்டுப்படுத்த தமிழக கும்கி யானைகள்

புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகளின் தாக்குதல் பல பகுதிகளில் அதிகரித்துள்ளன. இதனால், அம்மாநில அரசு கடும் இழப்புகளைச் சந்தித்து வருகின்றது. இந்நிலையில், ஊருக்குள் புகுந்து அட்டூழியம் செய்யும் யானைகளைக் கட்டுப்படுத்தி, அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் விரட்டுவதற்காக தமிழ்நாட்டைச் சார்ந்த 'கும்கி' யானைகளின் உதவியை அம்மாநில அரசு கோரியுள்ளது.

ஊருக்குள் புகுந்து அட்டூழியம் செய்யும் காட்டு யானைகளைக் கட்டுப்படுத்த, பிரத்யேகமான பயிற்சி அளிக்கப்பட்டுள்ள கும்கி யானைகளை தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்க கோரி, அம்மாநில வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சத்யபிரதா சாஹு, தமிழக வனத்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், "கடந்த சில மாதங்களாகவே ஒடிசா மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் காட்டு யானைகளின் தாக்குதல் சம்பவங்களை கட்டுப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். உங்களுடைய பயிற்சி அளிக்கப்பட்ட கும்கி யானைகளை அனுப்புவதன் மூலம், அட்டூழியம் செய்யும் யானைகளைக் கட்டுப்படுத்த மிகவும் உதவும் வகையில் இருக்கும்.

இதையும் படிங்க: கோவையில் தகரக் குடிசையை தாக்கிய யானை.. நூலிழையில் உயிர் தப்பிய குடும்பம் - பதைபதைக்கும் வீடியோ!

மேலும், இந்த கும்கி யானைகளை வன ரோந்துப் பணிகள் மற்றும் மீட்புப் பணிகளில் பயன்படுத்தக் கூடிய வகையில் மிகுந்த உதவிகரமாக இருக்கும். இதன் விளைவாக, இங்கு தொடர்ந்து நடைபெற்று வரும் விவசாயப் பயிர்கள் சேதமடைவது, குடியிருப்புப் பகுதிகள் சேதமடைவது, யானைகள் மற்றும் மனிதர்களின் உயிரிழப்புகள் ஏற்படுவது ஆகியவை பெருமளவு கட்டுப்படுத்தக்கூடும்.

மேலும், தமிழக வனத்துறை கும்கி யானைகளுக்கு பயிற்சி அளித்து, வனவாழ்வியலை பாதுகாப்பதில் வெற்றி பெற்றுள்ளதைக் கருத்தில் கொண்டு, 4 கும்கி யானைகளை ஒடிசாவில் காட்டு யானைகளால் ஏற்படும் பிரச்னைக்குரிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டி கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டு இருந்தது.

தொடர்ந்து அக்கடிதத்தில், கும்கி யானைகளை பராமரிக்கும் பாகன்களையும் உடன் அனுப்பி வைக்குமாறும், அவர்கள் மூலம் ஒடிசாவில் உள்ள யானை பாகன்களுக்கு கும்கி யானைகளுடன் பழகுவதற்கான பயிற்சிகளை வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், ஒடிசாவில் நடைபெற்று வரும் மனித மிருக மோதல்களைக் கருத்தில் கொண்டு, இக்கடித்தை விரைவாக பரிசீலனை செய்யுமாறு, ஒடிசா மாநில வனத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் கூடுதல் செயலாளர் சத்யபிரதா சாஹு, தமிழக வனத்துறைக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்புடைக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு!

Last Updated : Jan 23, 2024, 12:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.